முஸ்லீம் என்ற காரணத்துக்காக பயணிக்க அனுமதி மறுத்த விமான நிறுவனத்திற்கு 50 ஆயிரம் டொலர்கள் அபராதம்..!


முஸ்லீம் என்ற காரணத்துக்காக பயணிக்க அனுமதி மறுத்த விமான நிறுவனத்திற்கு 50 ஆயிரம் டொலர்கள் அபராதம்!

மூன்று முஸ்லீம் பயணிகளை விமானங்களில் இருந்து வெளியேற்ற உத்தரவிட்டதற்காக டெல்டா ஏர் லைன்ஸ் நிறுவனத்திற்கு 50 ஆயிரம் டொலர்கள் அபராதம் விதித்து அமெரிக்க போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு ஜூலை மாதம் பாரிஸிலிருந்து ஓஹியோ மாகாணம் நோக்கி செல்லவிருந்த டெல்டா ஏர் லைன்ஸ் விமானத்தில், முஸ்லீம் தம்பதியினர் தன்னை பதற்றப்படுத்தியதாக இளம்பெண் ஒருவர் அங்கிருந்த விமான பணியாளர்களிடம் கூறியுள்ளார்.

அதேபோல விமான பணிப்பெண் ஒருவர் நடந்து சென்ற போது, தலைப்பாகை அணிந்திருந்த அந்த நபர் தனது தொலைபேசியில் 'அல்லாஹ்' என்று பல முறை எழுதுவதைக் கண்டதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து கேப்டனின் வேண்டுகோளின் பேரில், டெல்டா மேற்பார்வையாளரும் பாதுகாப்பு அதிகாரியும் தம்பதியரை விமானத்திற்கு வெளியே அழைத்து விசாரித்துள்ளனர்.

அவர்கள் மீது எந்த சந்தேகமும் இல்லை எனக்கூறி மீண்டும் பறக்க அனுமதித்தனர். ஆனால் விமானி அவர்களை மீண்டும் ஏற்ற மறுப்பு தெரிவித்ததால், மறுநாள் காலையில் தான் அங்கிருந்து புறப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட ஜோடியின் பெயர் வெளியிடப்படவில்லை. ஆனால் அவர்களது பிரதிநிதிகள் அவர்களை சின்சினாட்டி பகுதியைச் சேர்ந்த பைசல் மற்றும் நாசியா அலி என்று அடையாளம் காட்டினர்.

இதேபோன்ற மற்றொரு சம்பவமானது 5 நாட்கள் கழித்து ஆம்ஸ்டர்டாமில் நடந்துள்ளது. விமான பணிப்பெண்கள் மற்றும் பயணிகள் அதில் இருந்த ஒரு முஸ்லீம் நபரை பற்றி விமானியிடன் புகார் கூறியுள்ளனர்.

ஆனால் இணை விமானி, நபரிடம் அசாதாரணமான ஒன்றையும் காணவில்லை எனக்கூறியுள்ளார். டெல்டாவின் பாதுகாப்பு அலுவலகம் அவரது பதிவு எந்த கவலையும் எழுப்பவில்லை எனக்கூறி அனுப்பியுள்ளனர்.

ஆனால் நியூயார்க்கிற்கு விமானம் புறப்பட தயாரான நேரத்தில், அந்த நபரையும் அவருடைய உடமைகளையும் விமானத்திலிருந்து விமானி வெளியேற்றியுள்ளார்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக விசாரித்த அமெரிக்க போக்குவரத்துத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட ஒப்புதல் உத்தரவின்படி, டெல்டா ஏர் லைன்ஸ் நிறுவனத்திற்கு 50,000 டொலர்கள் அபராதம் விதித்தது.

சம்பவங்களில் பயணிகளிடையே பாகுபாடு காட்டுவதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு டெல்டா மறுத்தத. ஆனால் அது சூழ்நிலைகளை வித்தியாசமாகக் கையாண்டிருக்கலாம் என்று ஒப்புக் கொண்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்