மொட்டு சின்னத்தில் அம்பாரையில் முஸ்லிம் பிரதிநிதி சாத்தியமற்றது !


மொட்டு சின்னத்தில் அம்பாரையில்
முஸ்லிம் பிரதிநிதி சாத்தியமற்றது !

77 ஆயிரம் விருப்பு வாக்கு வேண்டும்..
அல்லாஹ் நாடினால் அதா, சலீம் வெற்றி.?

(ஏ.எச்.எம். பூமுதீன்)

2020 − பாராளுமன்ற தேர்தல் களம் எங்கும் , என்றும் இல்லாதவாறு − அம்பாரை மாவட்டத்தில் சூடு பிடித்துள்ளதை அவதானிக்க முடிகிறது..

ஜ.தே.க , முகா , அ.இ.ம.கா , மொட்டு , தே.கா , த.தே.கூ என்பன இங்கு போட்டியிட ஆயத்தமாகி வருகின்றன.

ஜ.தே.க + முகா கூட்டு என்ற பேச்சும் , ஜ.தே.க + முகா + அ.இ.ம.கா என்ற பேச்சும் ஒரு பக்கம் உலா வர , மறுபக்கம் அ.இ.ம.கா தனித்து போட்டியிடலாம் என்றும் கூறப்படுகின்றது.

ஜ.தே.க + முகா + அ.இ.ம.கா கூட்டனியை முகா பிரமுகர்கள் அதிகம் விரும்புவதாக அறியப்பட்டாலும் மகா பிரமுகர்களும் ஆதரவாளர்களும் இவ்வாறான கூட்டனியை விரும்பவில்லை என்பதை வெளிப்படையாகவே கூறி வருகின்றனர்.

"ஜ.தே.க.+ முகா இணைந்து போட்டியிட்டால் 2 ஆசனங்களையே பெற முடியும். அதில் ஒருவர் சிங்களவர். மற்றவர் முஸ்லிம். 3 முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பெற்று சிங்களவர் ஒருவராக 4 ஜ பெற்று மாவட்டத்தை கைப்பற்ற வேண்டுமென்றால் மக்கள் காங்கிரஸையும் இணைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு பிரதியுபகாரமாக மகா − அம்பாரையில் தேசியப்பட்டியலை பெற உதவுவோம்" என்ற ரீதியிலும் முகாவுக்குள் பேச்சு நடத்தப்பட்டுள்ளது.
ஆனால் , மக்கள் காங்கிரஸ் தனது சுய கௌரவத்தை விட்டுக்கொடுக்கப் போவதில்லை.முகா 3ஜ பெற மகாவுக்கு என்ன தேவைப்பாடு இருக்கிறது என்று கேள்வி எழுப்புகின்றனர் மகாவின் அம்பாரை ஆதரவாளர்கள்.

பெரும்பாலும் மக்கள் காங்கிரஸ் − அம்பாரையில் தனித்தே களமிறங்கும் என்று நம்பப்படுகின்றது.

முகா முக்கிய பிரமுகரின் கருத்துப்படி மக்கள் காங்கிரஸ் தனித்துக் கேட்டால் ஆசனம் ஒன்று நிச்சயம் என்கின்றார்..

2015 இல் 33200 வாக்குகளைப் பெற்ற மகா , உளளூராட்சித் தேர்தலில் 45000 வாக்குகளைப் பெற்றது. தற்போது அம்பாரை மாவட்டத்தில் மக்கள் காங்கிரஸின் வாக்கு வங்கி அண்ணளவாக 50 ஆயிரமாக உள்ளது..

இது அந்த இடத்தில் நிற்க ;

மொட்டு கட்சியில் அக்கரைப்பற்று அதாவுள்ளா மற்றும் சாய்ந்தமருது சலீம் ஆகியோர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது..

ஜனாதிபதித் தேர்தலில் − அம்பாரை சிங்கள மக்கள் சுமார் 90,000 வாக்குகளையும் முஸ்லிம்கள் சுமார் 35,000 வாக்குகளையும் அளித்தனர். ஆனால் , பாராளுமன்றத் தேர்தலில் சிங்கள வாக்குகள் அதிகரித்து முஸ்லிம் வாக்குகள் குறைவடையவே வாய்ப்பு உள்ளது.

இதற்கு பிரதான காரணம் , 12.5 வெட்டுப் புள்ளி விவகாரம் மற்றும் பெரும்பான்மை என்ற அகங்கார பேச்சும் உள்ளன. இதனால் மொட்டு முஸ்லிம் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி அடைந்து , கைசேதப்பட்டுப் போயுள்ளனர். இதனால் , மொட்டு முஸ்லிம் வேட்பாளருக்கு அம்பாரை முஸ்லிம் பகுதிகளிலிருந்து கிடைக்கப் போகும் மொத்த வாக்கு வெறுமனே சுமார் 25000 இற்கு உட்பட்ட வாக்குகளே.

ஓரு பேச்சுக்கு 35000 வாக்குகள் மீண்டும் அளிக்கப்பட்டு − சாய்ந்தமருது மக்களும் ஓன்றுபட்டு அவர்களின் 19000 வாக்குகளை அளித்தாலும் சுமார் 50000 வாக்குகளே கிடைக்கப் போகின்றது..( 35000 இற்குள் சாய்ந்தமருதின் 5000 வாக்குகளும் உள்ளடங்கியுள்ளதை கவனத்தில் கொள்க) ( 50,000 என்பது ஒரு எடுகோளே..! இந்தளவு பெற முடியாது )

சிங்கள மக்கள் சுமார் ஒரு இலட்சம் வாக்குகளை வழங்க வாய்ப்புள்ளது. அதன்படி 3 ஆவதாக தெரிவாகும் சிங்கள வேட்பாளர் பெறப்போகும் விருப்பு வாக்குகள் சுமார் 77,000 அல்லது 80,000 ஆக இருக்கப்போகின்றது.. ஆக , மொட்டில் 3 சிங்களவர் தெரிவாக

முஸ்லிம்களின் வாக்குகள் துணை போகப் போகின்றது.. இறுதியில் , அல்லாஹ்வின் நாட்டம் சுமார் 25,000 அல்லது 40,000 விருப்பு வாக்குகளைப் பெற்று அதாவுள்ளாவும் சலீமும் தோல்வியடையப் போகின்றனர் என்பதே யதார்த்தம்.

மொட்டு 3 சிங்கள வேட்பாளர்களை வெற்றி கொள்ள , ஜ.தே.க − முகா மற்றும் அ.இ.ம.கா தனித்தனியே கேட்டால் தலா ஒவ்வொரு ஆசனத்தைப் பெற்றுக் கொள்ளப் போகின்றது. த.தே.கூ. ஒரு ஆசனம்..

சிந்தனைக்கு ;

அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டுமானால் 2 வழிகளே உள்ளன.

1− ஜ.தே.க. + முகா + அ.இ.ம.கா கூட்டு.
இதில் , முகா 2 வேட்பாளர்களை நிறுத்தி மகா வின் ஒரு வேட்பாளராக மூவருக்கு ஒன்றுபட்டு வாக்களிப்பது. அம்பாரைக்கான தேசியப்பட்டியலை மகாவுக்கு வழங்க ஜ.தே.க , முகா உடண்படுவது.

2 − முகா மற்றும் மகாவுடன் இணைந்து போட்டியிடுவதில்லை என்ற கருத்து ஜ.தே.க வுக்குள் வலுத்து வருவதால் மேற்சொன்ன கூட்டு சாத்தியமற்ற நிலையே காணப்படுகின்றது.

அதனால் , மொட்டுக்கு வாக்களிக்க நினைக்கும் முஸ்லிம்கள் வீணாக 3 சிங்களவரை தெரிவு செய்யும் பாதக செயற்பாட்டைக் கைவிட்டு − ஏற்கனவே , 50 ஆயிரம் வாக்கு பலத்துடன் இருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு ஒன்றுபட்டு வாக்களிப்பதால் இன்ஷா அல்லாஹ் 2 ஆசனங்களை பெற்றுக் கொள்ள வழி கிட்டும்.. விரன்டாவாதத்தை விட்டுவிட்டு சற்று யோசித்துப் பாருங்கள்.

இது ஒரு புறமிருக்க , முன்னாள் அமைச்சர் அதாவுள்ளாவை எப்பிடியாவது எம்பியாக்கி அழகு பார்க்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் நினைத்தால் ..., இப்படியும் செய்யலாம்..

எப்படி என்றால் , தேசிய காங்கிரஸை கலைத்து விட்டு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் தலைமைத்துவத்தை ஏற்று மகாவில் இணைந்து , தேர்தலில் குதித்தால் மக்கள் காங்கிரஸுக்கு கிடைக்கும் 2 ஆசனங்களில் ஒன்றில் அதாவுள்ளாவும் வெற்றி பெற்று இன்ஷா அல்லாஹ் பாராளுமன்றம் செல்லலாம்..

ஆக , அம்பாரை மாவட்ட முஸ்லிம்கள் தமது பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக் கொள்ளவும் அதிகரிக்கவும் சிந்தனையோடு முயற்சிக்க வேண்டிய தருணத்தில் தற்போது இருந்து கொண்டிருக்கின்றார்கள்..

மொட்டு சின்னத்தில் அம்பாரையில் முஸ்லிம் பிரதிநிதி சாத்தியமற்றது ! மொட்டு சின்னத்தில் அம்பாரையில் முஸ்லிம் பிரதிநிதி சாத்தியமற்றது ! Reviewed by NEWS on January 15, 2020 Rating: 5