பள்ளிவாசலுக்குள் புத்தர் சிலை! ரிஷாத் பதியுதீன் கண்டனம்!


மஹர சிறைச்சாலையில் 100 வருடம் பழைமை வாய்ந்த பள்ளிவாசலுக்குள் புத்தர் சிலையை நிறுவி, அதனை ஓய்வு அறையாக மாற்றி, முஸ்லிம் சமூகத்தின் மத உணர்வுகளை காயப்படுத்திய செயலை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் எம்.பி தெரிவித்துள்ளார்.

இதற்குப் பின்னால் உள்ள சக்திகளுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரை கேட்டுள்ள அவர், இந்தச் செயலானது அரசியலமைப்பில் மதங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளையும், அடிப்படை உரிமைகளையும் நிராகரிக்கின்றதெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனநாயக நாட்டில் இறைமை மற்றும் உரிமைகளை மீறுகின்ற இச்செயலானது கேலிக்குரியது எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார். இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறாமல் தடுப்பது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பள்ளிவாசலுக்குள் புத்தர் சிலை! ரிஷாத் பதியுதீன் கண்டனம்! பள்ளிவாசலுக்குள் புத்தர் சிலை! ரிஷாத் பதியுதீன் கண்டனம்! Reviewed by ADMIN on February 26, 2020 Rating: 5