சிரியாவில் முதலாவது கொரோனா மரணம்..!


10 வருடங்களாக சிவில் யுத்தங்கள் இடம்பெற்று வரும் சிரியாவில் முதலாவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியி்ட்டுள்ளன.
சிரியாவில் இதுவரையில் 9 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, இது இன்னும் அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டு வைத்திய நிபுணர்கள் எச்சரித்துளளனர்.
சிரியாவில் தற்போது சில மருத்துவமனைகள் மாத்திரமே செயற்பட்டு வருவதாகவும், பயிற்சி பெற்ற ஊழியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் இடம்பெயர்ந்த 6 மில்லியன் மக்கள், தொடர்ந்து நெரிசலான அகதி முகாம்களில் வாழ்ந்து வருவதாக தெரிவி்க்கப்படுகிறது.
சிரியாவில் முதலாவது கொரோனா மரணம்..! சிரியாவில் முதலாவது கொரோனா மரணம்..! Reviewed by ADMIN on March 31, 2020 Rating: 5