பிக்குகள் தேர்தலில் போட்டியிடக்கூடாது அஸ்கிரிய மகாநாயக்கர்களின் அதிரடி முடிவு ..


பௌத்த பிக்குகள் எதிர்காலத்தில் அரசியல் பதவிகளைக் கோருவதை தடுக்க தேர்தல் சட்டத்தில் திருத்தங்கள் உடனடியாக அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வண. வரககொட ஞானரதன தேரர் வலியுறுத்தியுள்ளார்.

அஸ்கிரிய மகா விகாரைக்கு நேற்று(செவ்வாய்கிழமை) சென்றிருந்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவிடம் அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

‘இலங்கையின் தேர்தல் சட்டம் பழமையானது என்பதால், அவசரமாக அதில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் பௌத்த பிக்குகளுக்கு இடமளிக்கக் கூடாது.

பௌத்த மதகுருமார் அரசியல் பதவிக்கு போட்டியிட அனுமதிக்கப்பட்டால், அது புத்த சாசனத்துக்கு பெரும் அடியாக இருக்கும்’ என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்று மல்வத்த பீடத்தின் மகாநாயக்கரை சந்தித்த போதும், அவரும் இதேவிதமான கருத்தையே வெளிப்படுத்தியதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
பிக்குகள் தேர்தலில் போட்டியிடக்கூடாது அஸ்கிரிய மகாநாயக்கர்களின் அதிரடி முடிவு .. பிக்குகள் தேர்தலில் போட்டியிடக்கூடாது அஸ்கிரிய மகாநாயக்கர்களின் அதிரடி முடிவு .. Reviewed by ADMIN on March 04, 2020 Rating: 5