சிறையில் இருந்தபடி 1000 குடும்பங்களிற்கு நிவாரணம் வழங்கிய போதைப் பொருள் கடத்தல் மன்னன்

ADMIN
0 minute read
0


இலங்கையின் பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன் அரசாங்கத்தினால் கண்டுகொள்ளப்படாத மக்களுக்கு 5000 ரூபா பெறுமதியான அத்தியாவசிய பொருட்களை வழங்கி உதவிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பு பொறளை – வனாதமுள்ள பகுதியை சேர்ந்த பறை சுத்தா என்கிற கடத்தல் மன்னன் தற்போது வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த நபர் தனது குடியிருப்பு அமைந்துள்ள பகுதியை சேர்ந்த 1000 குடும்பங்களுக்கு சிறையில் இருந்த படியே உதவியுள்ளதாக கூறப்படுகின்றது.
To Top