வீட்டினுள் புகுந்து பொலீஸ் அதிகாரிகளின் அடடாவடித்தனம் !


முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்கு மற்றும் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியை சேர்ந்த 3 நபர்கள் மீது முல்லைத்தீவு பொலிஸ் நிலைய அதிகாரிகள் மூர்க்கத்தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர்.

குறித்த நபர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சம்பவம் தொடர்பில் பொலிஸ் முறைப்பாடு பதிவு செய்ய முல்லைத்தீவு பொலிசார் மறுத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

முள்ளிவாய்க்கால் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிக்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள் சிலர், ஒரு நபருடைய பெயரைக் கேட்டு அவர் எங்கே என்றும் அவரைக் கொண்டு வந்து உடனடியாக ஒப்படைக்குமாறு கோரியே மூன்று நபர்கள் மீது மூர்க்கத்தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர்.

குறித்த தாக்குதலில் காயமடைந்த நபர்கள் 1990 நோயாளர் காவு வண்டி மூலமாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காரணம் இன்றி இரவு வேளையில் வீடுகளுக்குள் புகுந்து இவ்வாறான தாக்குதல் நடத்துவதன் பின்னணியில், குறித்த பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளதுடன் குறித்த நபர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் குறித்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வீட்டினுள் புகுந்து பொலீஸ் அதிகாரிகளின் அடடாவடித்தனம் !  வீட்டினுள் புகுந்து பொலீஸ் அதிகாரிகளின் அடடாவடித்தனம் ! Reviewed by ADMIN on May 09, 2020 Rating: 5