எதிர்வரும் நாட்களில் திருமண நிகழ்வுகளுக்கு நிபந்தனையுடன் அதற்கான அனுமதியை வழங்கவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவிக்கின்றார்.
எனினும், மிகுந்த கட்டுப்பாடுகளை விதிப்பதற்கும் எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். திருமண மண்டபம் அல்லது திருமணம் செய்கின்ற தலங்களில் குறைந்த எண்ணிக்கையிலானவர்களே கலந்துகொள்ள அனுமதிக்கப்படவுள்ளனர்.
இது குறித்த சட்டதிட்டங்களை எதிர்வரும் நாட்களில் அறிவிக்கவுள்ளதாகவும் வைத்தியர் அனில் ஜாசிங்க கூறினார். இதேவேளை, பிற சமூக நிகழ்வுகளை நடத்துவதற்கான விதிமுறைகள் எதிர்நாட்களில் வெளியிடப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.