இன்று நள்ளிரவு முதல் பெற்றோலின் விலை உயர்வு!!

ADMIN
0 minute read
0

லங்கா ஐ.ஓ.சீ நிறுவனம் பெற்றோலின் விலையை உயர்த்துவதற்கு தீர்மானித்துள்ளது. இதன்படி, நாடு முழுவதிலும் இயங்கி வரும் லங்கா ஐ.ஓ.சீ நிறுவனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 92 ஒக்டேன் பெற்றோலின் விலை லீற்றர் ஒன்றுக்கு 5 ரூபாவினால் உயர்த்தப்படுகின்றது.

இன்று நள்ளிரவு முதல் இந்த விலை உயர்வு அமுல்படுத்தப்படும் என லங்கா ஐ.ஓ.சீ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி ஒரு லீற்றர் பெற்றோலின் புதிய விலை 142 ரூபா என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலைகள் அதிகரிக்கப்படுவதாக எவ்வித அறிவிப்புக்களும் வெளியாகவில்லை.
To Top