கைதுப்பாக்கியுடன் சிக்கிய சட்டவிரோத கருக்கலைப்பு செய்யும் பெண்கள் இருவர்


பாணந்துரை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் வைத்தியசாலை நிலையம் என்ற பேரில் நடத்திசெல்லப்பட்ட சட்டவிரோத கருகலைப்பு மையமொன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

வலான பொலிஸ் பிரிவின் திட்டமிட்ட குற்றசெயல்களை தடுக்கு விசேட பொலிஸார் இன்று காலை இந்த சுற்றிவளைப்பை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது ஓய்வுப்பெற்ற பெண் வைத்தியர் ஒருவரும், அவருக்கு உதவியாக செயற்ப்பட்ட மற்றுமொரு பெண்ணும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இரண்டு பேரும் இணைந்து பாணதுறை மஹாபெல்லன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளனர்.

இதனைத் தொடர்நது பொலிஸார் அந்த வீட்டை சோதனைக்கு உட்ப்பட்டுத்தியபோது, வீட்டினுல் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கருத்தடை செய்வதற்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகள், கை துப்பாக்கி ஒன்று, கட்டு துப்பாக்கிவகையிலான துப்பாக்கி ஒன்று, 9MM வகை துப்பாக்கி ரவைகளை சேமிக்கும் 21 தொகுதிகள் என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பெண்ணொருவருக்கு கருத்தடை செய்ய ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு, குறித்த வைத்தியரின் உதவியாளர் ஊடாக பெண்னொருவரை பொலிஸார் அந்த இடத்திற்கு அனுப்பிவைத்துள்ளனர்.

இதன்போது பொலிஸார் அனுப்பிய பெண்ணுக்கு கருத்தடை செய்வதற்கு இணக்கப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்து 70 ஆயிரம் ரூபாவை சந்தேகநபராக குறித்த வைத்தியர் கோரியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பொலிஸார் அனுப்பிய பெண்ணுக்கு கருத்தடை செய்வதற்காக ஸ்கேன் பரிசோதனை முன்னெடுக்கும் சந்தர்ப்பத்தில், குறித்த வைத்தியரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ரயிகம பிரதேசத்தை சேர்ந்த 62 வயதுடைய ஓய்வுப்பெற்ற வைத்திய பெண்ணும், பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய உதவியாளராக செயற்ப்பட்ட பெண்ணுமே இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை பாணதுறை நீதவான் முன்னிலையில் நாளை முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கைதுப்பாக்கியுடன் சிக்கிய சட்டவிரோத கருக்கலைப்பு செய்யும் பெண்கள் இருவர்  கைதுப்பாக்கியுடன் சிக்கிய சட்டவிரோத கருக்கலைப்பு செய்யும் பெண்கள் இருவர் Reviewed by ADMIN on May 10, 2020 Rating: 5