நேற்று 40 புதிய கொரோனா தொற்றாளர்கள்!


நேற்றைய தினம் கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 40 பேரில் 32 பேர் வௌிநாட்டில் இருந்து தாயகம் திரும்பியவர்கள் என இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதில் ஏழு தொற்றாளர்கள் கடற்படையை சேர்ந்தவர்கள் என தெரிவித்த அவர் மற்றைய நபர் கடற்படையுடன் நெருங்கிப் பழகிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டவர் என தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1683 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 823 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை நாட்டில் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 849 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்று 40 புதிய கொரோனா தொற்றாளர்கள்! நேற்று 40 புதிய கொரோனா தொற்றாளர்கள்! Reviewed by ADMIN on June 03, 2020 Rating: 5