கோர விபத்து... பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் உயிரிழப்பு.


வவுனியா கனகராயன்குளம் A9 வீதியில் இன்று (03) காலை இடம் பெற்ற விபத்தில் பொலிஸ்

உத்தியோகத்தர் உட்பட இருவர் பலியாகியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,
மட்டகளப்பில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் விடுமுறை நிமித்தம் யாழ்பாணத்தில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு பிறிதொரு இளைஞருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
இதன் போது இன்று காலை 5:30 மணியளவில் கனகராயன்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.
விபத்தில் அரசடி வீதி நல்லூரை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தரான ஜெயமூர்த்தி திசிகாந்தன், பளை வீதி யாழ்ப்பாணத்தை சேர்ந்த நிசான் யனுஸ்டன் ஆகிய இருவரும் பலியாகியுள்ளனர்.
சடலம் வவுனியா பொது வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பாக கனகராயன்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கோர விபத்து... பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் உயிரிழப்பு. கோர விபத்து... பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் உயிரிழப்பு. Reviewed by ADMIN on June 03, 2020 Rating: 5