நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நாளை வியாழக்கிழமை (4) மற்றும் நாளை மறுதினம்
வெள்ளிக்கிழமை (5) முழு நேரமும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருக்கிறது.
அதன்படி இன்று இரவு 10 மணிக்கு ஆரம்பமாகும் ஊரடங்கு சட்டம் சனிக்கிழமை காலை 4 மணி வரை தொடரும்.
ஜுன் 6 சனிக்கிழமை காலை முதல் அனைத்து மாவட்டங்களிலும் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் முன்னர் போன்று இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை மட்டுமே அமுல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
( வழமைபோல் நாடு முழுதும் ஞாயிறு தினத்தில் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் இந்த வாரமும் அமுல் படுத்தப்படுமா என்பது தொடர்பில் இதுவரை உறுதிப்படுத்தப் படவில்லை)
கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு அனுமதியளிக்கப்படும்.
