இலங்கை சந்தையில் தங்கத்தின் விலை பாரியளவு அதிகரிப்பு!
இலங்கை சந்தையில் தங்கத்தின் விலை பாரியளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரையில் ஒரு பவுன் தங்கத்தின் விலை 83000 முதல் 84000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.செய்கூலியுடன் சேர்த்து ஒரு பவுன் தங்கத்தின் விலை 90000 – 100000 ரூபா வரை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு முன்னர் தங்கம் ஒரு பவுனின் விலை 70 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனையாகியுள்ளது.

இதேவேளை கொரோனா தொற்று காரணமாக உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை சந்தையில் தங்கத்தின் விலை பாரியளவு அதிகரிப்பு! இலங்கை சந்தையில் தங்கத்தின் விலை பாரியளவு அதிகரிப்பு! Reviewed by ADMIN on June 18, 2020 Rating: 5