பொதுஜன பெரமுனவில் இணைய ரவி திட்டம்.


முன்னாள் நிதியமைச்சரான ரவி கருணாநாயக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துக்கொண்டாலும் அது குறித்து ஆச்சரியப்பட தேவையில்லை என முன்னாள் ராஜாங்க அமைச்சர் அனுருத்த ஜயரத்ன தெரிவித்துள்ளார்.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.


குற்றவாளிகளும், மோசடியாளர்களும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டார்கள் என்பதற்காக செய்த தவறுகளில் இருந்து தப்பிக்க இடமளிக்க போவதில்லை.


முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தேர்தலில் போட்டியிடாது விலகினாலும் அவர் சம்பந்தமாக நடக்கும் விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெறும் எனவும் அவற்றுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் நிறுத்தப்பட மாட்டாது எனவும் அனுருத்த ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.
பொதுஜன பெரமுனவில் இணைய ரவி திட்டம். பொதுஜன பெரமுனவில் இணைய ரவி திட்டம். Reviewed by ADMIN on June 12, 2020 Rating: 5