விசாரணைகளில் இருந்து எவருக்கும் தப்பிக்க முடியாது நாமல் எச்சரிக்கை.


லீசிங் நிறுவன ஊழியர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த இலங்கை சுய தொழிலாளர் தேசிய முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தனவின் இறுதிக்கிரியைகள் இன்று (14) இடம்பெறவுள்ளது.

கெஸ்பாவ பொது மயானத்தில் இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தன்னிச்சையாக செயற்படும் லீசிங் நிறுவனங்களுக்கு எதிராக சட்டத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சுனில் ஜயவர்தனவின் கொலை சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் இருந்து எவருக்கும் தப்பிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
விசாரணைகளில் இருந்து எவருக்கும் தப்பிக்க முடியாது நாமல் எச்சரிக்கை. விசாரணைகளில் இருந்து எவருக்கும் தப்பிக்க முடியாது நாமல் எச்சரிக்கை. Reviewed by ADMIN on June 14, 2020 Rating: 5