தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிரடி அறிவிப்பு.


தேர்தல் காலப்பகுதியில் வேட்பாளர்களை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளில் சிறுவர்களை ஈடுபடுத்த வேண்டாம் என தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது.
வேட்பாளர்களை ஊக்குவிப்பதற்கான காணொளிகள் பதாகைகள் மற்றும் விளம்பரப்படுத்தலுக்காக சிறுவர்களை ஈடுப்படுத்துவது அதிகரித்து வருதாக பல கண்காணிப்பு குழுக்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்திருந்தன.
இதற்கமைய குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வேட்பாளர்களை ஊக்குவிப்பதற்காக சிறுவர்களை ஈடுபடுத்துவது அவர்களின் ஆளுமை வளர்ச்சிக்கும், மனநிலைக்கும் தீங்கு விளைவிக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிரடி அறிவிப்பு. தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிரடி அறிவிப்பு. Reviewed by ADMIN on July 15, 2020 Rating: 5