அரசாங்கத்தை அமைத்த பின்னர் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் நூற்றுக்கு 4 வீத கடன் வழங்குவதாக மக்கள் தேசிய சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஹோகந்தர பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள அரசாங்கம் நாட்டிற்கு சேவை செய்ய முடியாத பலவீனமான அரசாங்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.