நீதிமன்ற உத்தரவை மீறிய சிவாஜிலிங்கம் கைது.


தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே சிவாஜிலிங்கம் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திலீபன் 33 ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கவிருந்த நிலையில், பொலிஸார் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தின் தடை உத்தரவை கோரி, நினைவு தினத்தை அனுஷ்டிக்க தடை உத்தரவை பெற்றிருந்தனர்.

இந்நிலையில், சிவாஜிலிங்கம் கோண்டாவில் பகுதியில் உள்ள சிறி சபாரத்தினத்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய போதே, கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட அவர் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

-யாழ். நிருபர் பிரதீபன்-
நீதிமன்ற உத்தரவை மீறிய சிவாஜிலிங்கம் கைது. நீதிமன்ற உத்தரவை மீறிய சிவாஜிலிங்கம் கைது. Reviewed by ADMIN on September 15, 2020 Rating: 5