நாடு முழுமையாக திறக்கும் திகதி குறித்த அறிவிப்பு...

 

நாட்டை எதிர்வரும் 21ம் திகதி முழுமையாக திறப்பதாக தமக்கு உறுதி வழங்கியுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம கண்டியில் நேற்று (09) ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.


அதன்படி , எதிர்வரும் 21ம் திகதிக்கு பின்னர், மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.


இதற்கமைய ,மாகாணங்களுக்குள் பஸ் சேவை வழமை போன்று தற்போது முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.


மேலும் ,சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கு அமைய, எதிர்வரும் 21ம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டார்.

நாடு முழுமையாக திறக்கும் திகதி குறித்த அறிவிப்பு... நாடு முழுமையாக திறக்கும் திகதி குறித்த அறிவிப்பு... Reviewed by ADMIN on October 11, 2021 Rating: 5