மாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடை நீக்கம் : ஜீ.எல். பீரிஸ்

ADMIN
0 minute read
0

மாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடை விரைவில் நீக்கப்படும் என்று வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.


தற்போது ஒக்டோபர் 21 வரை மாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடை அமுலில் உள்ளது.


எனினும் வெளியுறவு அமைச்சர், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனான கூட்டத்தில்

மாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடையை நீக்குவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


வெளியுறவு அமைச்சர் எப்போது தடை நீக்கப்படும் என்று குறிப்பிடவில்லை ஆனால் நாட்டைத் திறக்க நடவடிக்கை இருப்பதாக கூறினார்.


சுற்றுலாப் பயணிகளுக்காகவும் இலங்கை தனது எல்லைகளைத் திறக்கும் என்று அவர் கூறினார்

To Top