சமையல் எரிவாயுவின் விலையில் மீண்டும் மாற்றம்

குறுகிய காலத்தில் மீண்டும் உள்ளூர் சந்தையில் எரிவாயு விலையை உயர்த்த வேண்டியிருக்கும் எனவும் விலைகளை உயர்த்தாமல் உலக சந்தையில் நிலையாக இருப்பது கடினம் எனவும் லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

இதன்படி ,எதிர்காலத்தில் எரிவாயு விலை குறைக்கப்படும் என்று மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்க வேண்டிய அவசியமில்லை என்றும் எரிவாயு விலையை ஒரு நிலையான விலைக்கு கீழ் கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும், நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் ,எதிர்காலத்தில் எரிவாயு விலை குறித்த ஒரு நிலையான திட்டம் திட்டமிடப்படும். ஒரு நிலையான விலையைப் பராமரிப்பது மற்றும் விலைகளைக் குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்துவது குறித்து கவனம் செலுத்தப்படும் என்றும் கூறியுள்ளது.


சமையல் எரிவாயுவின் விலையில் மீண்டும் மாற்றம் சமையல் எரிவாயுவின் விலையில் மீண்டும் மாற்றம் Reviewed by ADMIN on October 14, 2021 Rating: 5