நாடளாவிய முடக்கம் - தீர்மானம் இன்று


நாட்டை முழுமையாக முடக்காது கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல,

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கான விசேட கலந்துரையாடல் இன்றிரவு 7.30க்கு இடம்பெறவுள்ளது. இதன்போதே தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.

மிக முக்கியமாக, நாட்டின் சகல பிரஜைகளுக்கும் இரண்டு தடுப்பூசிகளையும் வழங்குவதைக் கட்டாயமாக்குவதற்கான சட்ட ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.


நாடளாவிய முடக்கம் - தீர்மானம் இன்று நாடளாவிய முடக்கம் - தீர்மானம் இன்று Reviewed by ADMIN on December 09, 2021 Rating: 5