மந்திரப் புன்னகையின் ரகசியம் மிஸ்வாக் எனும் அழகிய நபிவழி பொக்கிஷம்




ஆசிரியர் பீட ஆசிரியர் சாக்கீர்
ஒரு உலர்ந்த புன்னகையானது இரக்கத்தின் சர்வதேச மொழியாகும் - வில்லியம் ஆதர் வாட் இதயத்தின் ஆழத்திலிருந்து எழுகின்ற புன்னகை,   விழிகளை ஊடறுத்துக் கொண்டு மனங்களைக் கவரக் கூடிய சக்தி கொண்டது.  அவ்வாறான மந்திரப ;புன்னகையின் மிளிர்ச்சிபற்களின் வெளிர் மையிலும், ஆரோக்கியத்திலும் தங்கியிரு க்கின்றது. 

இந்த உண்மையை அறிந்தே மனிதன் ஆரம்பகாலம் முதல் வாய்ச் சுகாதாரத்தை பேணிவந்துள்ளான்.  நாக்கின் அசைவுகளும், பற்களும், உதடுகளின் தெளிவாக்கமும் பேசும்போது சிறந்த சொல்லாக்கத்திற்கு துணை நிற்கின்றன. இவையனைத்தும் ஐம்பொறி களிலொன்றா னவாயினுள் அமைந்திரு க்கின்றன. பல்லுப்போனால் சொல்லுப் போச்சு என்பா ர்கள், பற்கள் உணவின் பௌதீகச் சமீபாட்டுடன் மட்டும் தங்கி விடாமல், முகஅழகு, சொல்லாக்கம் என்பவற்றில் பங்களிக்கின்றது. 

பற்சுகாதாரத்தை பேணும் வழக்கத்தில் தற்காலத்தில் மிகப் பிரபல்யமாகதிகழ்வன பற்தூரிகைகள்,பற்பசைகள்,வாய்கழுவி என்பனவாகும். இவற்றின் விருத்திக்கு முதலாக நின்றவை இயற்கை எமக்களித்த மிஸ்வாக் குச்சிகள். இன்றைய பிளாஸ்டிக் உலகம் எம் வாய்வரை திணித் திருக்கின்ற மக்கிப்போகாதமசகுக் கழிவுகளின் ஒருநவீன கண்டுபிடிப்பேi நலோன் பற்துரிகைகள். இவை உலகிற்கு அறிமுகப்படுத்தப்படுவதற்கு பலஆயிரம் ஆண் டுகளுக்கு முன்னரேமக்கள் பற்குச்சிகளை பயன்படுத்திவந்தனர். 
விரல்களினால் பற்களைத் துப்பரவு செய்துவந்தமனிதர்கள் பின்னர் சாம்பல், கரி, மற்றும் மூலிகைகளையும் பயன்படுத்தினர். கி.மு9000 ஆண்டுகளுக்கு முன்னரே பல்துலக்கும் கலவைகள் பயன்பாட்டில் இருந்துள்ளன என்பதை பல்கேரிய தொல்பொருளியல் எச்சங்கள் நிருபிப்ப தாகவும். அத்தோடு கி.மு.3000 ஆண்டுகளில் பாபிலோனியாவில் பற்குச்சிகளின் பயன்பாடு இருந்ததுஎன்றும் குறிப்பிடுகின்றார்.  என்றாலும் பல்துலக்கும்பாரம்பரியம் பின்னர் கிரேக்க,உரோமசாம்ராஜ்யங்களிலும் பின்னர் உலகின் சிலகலாசாரங்களிடையேயும் விருத்தியடைந்துவந்துள்ளது. குறிப்பாகமத்தியஆசியா,தென்னாசியாவின் சிலபகுதிகள், தென்னமெரிக்கா,ஆபிரிக்கா,தென்அமெரிக்காபோன்றபகுதிகளைக் குறிப்பிடலாம். பதினேழாம் பதினெட்டாம் நூற்றாண்டு களில் ஐரோப்பாவின் பல்மருத்து 

வர்கள் பல்துலக்கும் வழக்கத்தை ஊக்குவிக்கத்தொடங்கினர், 1780களில் இங்கி லாந் தைச் சேர்ந்தவில்லியம் அடிஸ் என்பவரின் நவீனபற் தூரிகையின் வடிவ மைப்பின் பின்னர் ஐரோப்பாவில் இப்பழக்கம் விருத்தியடைந்தது. 
1930களில் நைலோனாலானபற்தூரிகைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இரண்டாம் உலக மகாயுத்தத்திற்கு பின்னர் (1945களுக்கு பின்னர்)தான் அமெரிக்காவில் பரவலாக பற்தூரிகைகளின் பயன்பாடு வழக்கத்திற்கு வந்துள்ளது என்பது ஆச்சர்யமாக இருந்தாலும் நிதர்சனமாகும்.
ஆனால் மத்திய கிழக்கில் ஒரு புரட்சிகர மாற்றம் இதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரேதுவங்கியிருந்து. ஆந்தப்பாலை நிலத்தில் ஒருமனிதர் தினமும் ஐந்துவேளை பற்துலக்குவதன் அவசியத்தையும்,அதனால் பலநன்மைகள் விளையுமென்றும், இது இறைவனின் நேசத்திற்குள்ளாகக் கூடிய செயல் என்றும் இதனைஊக்கப்படுத்திக் கொண்டிருந்தார் என்றால் இது பேரா ச்சர்யமாகும். 
அவர்தான் முஹம்மத் நபி(ஸல்) என இஸ்லாமியர்களால் போற்றப்படும் உலகில் மிகப் பிரபல்யமான இறைத் தூதராவார். அவர் சுத்தத்தை முழு இஸ்லாமிய நம்பிக்கையினதும் அரைவாசி எனவரை யறுத்தார். சுகாதாரத்திலும், தூய்மை பேணு வதிலும் பெரும் அக்கறையை ஏற்படுத்தினார். 
இறைத்தூதர்முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமுதாயத்திற்குச் சிரமமாகிவிடும் என்று இல்லாவிட்டால் ஒவ்வொரு தொழுகைக்கும் பல் துலக்குமாறு நான் கட்டளையிட்டிருப்பேன். எனஅபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஆயிஷா (ரலி) அவர்களிடம்,நபி (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்ததும் அவர்கள் செய்யும் முதல் வேலைஎது? என்றுகேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள்,பல் துலக்குவதுஎன்றுபதிலளித்தார்கள். (முஸ்லிம் புத்தகம் 2 ஹதீஸ் 423)
மேலும் பத்து விஷயங்கள் இயற்கைமரபுகளில் அடங்கும். 
மீசையைக் கத்தரிப்பது, தாடியைவளர்ப்பது, பல் துலக்குவது, நாசிக்குநீர் செலுத்துவது, நகங்களை வெட்டுவது,விரல் கணுக்களைக் கழுவுவது, 

அக்குள் முடிகளை அகற்றுவது, மர்ம உறுப்பின் முடிகளைமழிப்பது, தண்ணீரால் துப்புரவு செய்வதுஎன ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். 

மேற்கூறிய ஹதீஸ்கள் வலியுறுத்தும் மிஸ்வாக் எனவும், எதியோப்பியாவில் மெபகாஎனவும் இந்தியா பாகிஸ்தான் போன்ற இடங்களில் டாதுன் எனவும் அழைக்கப்படுகின்றது.

எனப்படுவது பற்களையும்,முரசினையும் சுத்தம் செய்யப் பயன்படும் விரலளவு தடிப்பமுடையமரக்குச்சியாகும். முத்திய கிழக்கில் மிஸ்வாக், ஸிவாக் எனவும், தன்ஸானியாவில் ம்ஸ்வாகி எனவும், எதியோப்பியாவில் மெபகாஎனவும் இந்தியா பாகிஸ்தான் போன்ற இடங்களில் டாதுன் எனவும் அழைக்கப்படுகின்றது.

 ளுயடஎயனழசயிநசளைஉய என்ற தாவரவியல் பெயரை உடையஅராக்குமரத்தின் பாகங்கள் பற்குச்சிகளாக பயன்படுத் தப்படுவதாலும், முஹம்மதுநபியவர்கள் இதனை பயன்படு த்தியதாலும் மிஸ்வாக் என்கின்ற சொல் இந்த மரத்தைக் குறிக்கவும் பயன்படுகிறது.

மத்திய கிழக்கிலே அரக்குமரமும்மேற் காபிரிக்காவில் எலுமிச்சை மற்றும் தோடைமர மும்மிஸ்வாக்கிற்காக.பயன்படுகின்றஅதேவேளைகறுப்புஅமெரிக்கர்கள் சென்னாமரத்தின் வேர்களையும்இந்தியதணைக்கண்டத்தில் பரவலாகவேப்பங்குச்சிகளையும் பயன்படுத்து கின்றனர்.
7000 வருடங்களாகபாபிலோனியர்களும் அராபியர்களும் கடைப்பிடித்துவந்த இந்த நடைமுறை முஹம்மது நபியவர்களின் வருகையின் பின்னர் ஏறத்தாள கி.பி.546 அளவில் இஸ்லாமிய நடைமுறைகளுள் ஒன்றாக உள்வாங்கப்பட்டது. ஜப்பானியர்கள் இதனை கோயோஜி எனஅழைக்கின்றனர். புராதனரோம, கிரேக்க, எகிப்திய, சீனமக்களிடையேயும் இவ்வழக்கம் நடை முறையில் இருந்துள்ளது. 
நவீனஉலகம் இத னைக்கைவிடதுணிந்தாலும்; இஸ்லாமியஉலகில் இந்தநடைமுறைமேலும் பரவலாகவளர்ந்துவருகின்றது. 
நவீனபற்தூரிகையின் வடிவமைப்பிற்கு முன்னோடியானமிஸ்வாக் பற்தூரிகையிலும் பார்க்கபலமடங்கு நன்மைவாய்ந்ததாக காணப்படுகின்றது. 
ஆண்மைய பல ஆராய்ச்சிகள் மிஸ்வாக்கின் குண நலன்களை வெளிப்படுத்துவதோடு. புல புதிய நிறுவனங்களும் மிஸ்வாக் குச்சிகளின் உற்பத்தியில் நாட்டம் செலுத்திவருகின்றன.
பற்தூரிகை, பற்பசை,தண்ணீர் என்ற மூன்று தனித்தனி கூறுகளின் மொத்த வடிவாக மிஸ்வாக் குச்சியை அவதானிக்க முடியும். 
மிஸ்வாக் குச்சியிலுள்ள இயற்கை இரசாயணப் பொருட்கள் மிகுந்த பயனுடையவை. சிலிக்கா உரோஞ்சும் மினுக்கியாக தொழிற்பட்டு கறைகளை  நீக்கி வெண்மையாக்குகின்றது.
;புற்று நோயாக்கத்திற்கெதிரான செய ற்பாட்டை கொண்டு ள்ளதுடன் பங்கசுக்களின் மென்சவ்வை அழித்து அவை வளர்வதையும் தடுக்கினறது.

கிளைக்கோசைல் ட்ரான்ஸ்பரேஸ் எனும் நொதியசெயற்பாட்டைத் தடுத்து முரசு அழற்சி, பற்சூத்தை என்பவற்றை தடுக்கின்றது ரெசின் எனப்படும் பிசின் பதார்த்தங்கள் பல் மிளிரியில் படையொன்றை அமைத்து காவிகளின் தாக்கத்திலிருந்து பாதுகாப்ப ளிக்கின்றது.
அல்கலொயிட் பதார்த்தம்,மற்றும் கந்தக சேர்வைகள் பக்டீரிய நொதியங்களை அழிக்கும் ஆற்றல் கொண்டுள்ளதால் பக்டீரிய தொற்று களிலிருந்து பாதுகாப்பளிக்கின்றது. ஆவியாகக்கூடியநெய்பதார்தங்களளும், மிஸ்வாக்கின் கசப்புச் சுவை காரணமாக அதிகமாக சுரக்கப்படும் உமிழ்நீரும்ஈறு அழுகலில் இருந்து பாதுகாக்கின்றது, விட்ட மின்- சிகாயங்கள் மீள் நிலைதிரும்புவதற்கு உதவுகின்றது. கல்சியம் உமிழ் நீரில் நிரம்ப லாவதால் பல்கரைதல் தடுக்க ப்படுகின்றது.
மிஸ்வாக்கின்  தொடர்பானபலமரபுகள் இஸ்லாமியஉலகில் பேணப்பட்டு வருகின்றன குச்சியை தேர்வுசெய்யும் போது அதிக கடினமானதாக வோமிருதுவ hனதாகவோ இருக்ககூடாது. மற்றும் அனுமதிக்கப்பட்ட மரங்களிலிருந்தே பெற ப்படவேண்டும் (ஸைத்தூன், அரா க்கு,வேம்பு)மற்றும் அதன் தடிப்பு சின்ன விரலின் அளவைவிடவும் நீளம் கை வீச்சத்திற்கும் (சாண்) இருக்கவேண்டும். பல் துலக்கும் போதுகுறைந்தபட்சம் மூன்றுமுறைமுரசில் தேய்க்கவேண்டும், ஒவ்வொருமுறையும் நீரில் அழுத்தி எடுக்க வேண்டும்.
வலதுகையால் பயன்படுத்தவேண்டும் மேல் கீழாக துலக்காமல்; வலம் -இடமாக பயன்படு த்துவதால் முரசில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கலாம். அதேநேரம் மிஸ்வா க்கைமலசல கூடத்தில் பயன்ப டுத்துவது விரும்பத்தகாத செயலாக  கருதப்படுகின்றது.
பல்வேறுவகைகளில் மருத்துவ, பௌதீக, ஆன்மீகரீதியில் பயனளிக்கும் மிஸ் வாக்கினை உலக சுகாதார நிறுவனம் 1983ல் வாய்ச் சுகாதாரத்தை பேணுவதற்கு சிறந்தகருவியாக பரிந்துரைத்தது. 2000ம் ஆண்டு சர்வதேச அறிக்கையில் இதனை மீண்டும் வலியு றுத்தியது. 
முகத்தின் கவர்ச்சியையும், சம்பாசனைகளின் சௌகர்யத்தையும்,வசீகரிக்கும் மந்திரப் புன்னகையையும் தோற்றுவிக்கும் மிஸ்வாக் இஸ்லாமிய கலாசாரத்தோடு பிணைந்த முஸ்லிம்களின் பாரம்பர்யத்தின் கௌரவ ச்சின்னமாகும்.