கல்முனை பிரதேச அபிவிருத்தி இணைப்புக்குழுக் கூட்டம்

எஸ் .எல். அப்துல் அஸீஸ்

கல்முனை பிரதேச அபிவிருத்தி இணைப்புக்குழுக் கூட்டம் இன்று (30) கல்முனை பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

இன்றய கூட்த்தில் கல்முனை நகர மற்றும் உட் கட்டமைப்பு அபிவிருத்தி, டெங்கு நோய் கட்டுபாடுக்கான செயற்பாடுகள், பிரதேச தின்பக்கழிவு அகற்றல் செயற்பாடுகள், மாநகர சபைக்குறிய  பிஸ்கால் காணி தொடர்பான விடயம்கள், கல்வி அபிவிருத்தி தொடர்பான செயற்பாடுகள்  போன்ற பலவிடயம்கள்  கலந்தாலோசிக்கப்பட்டு, அவற்றுக்காக விசேட குழுக்களும் அமைக்கப்படடன.

கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மட் ஹனியின் இணைப்பில், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையிலும் இடம்பெற்ற இக் கூட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.அப்துல் ரஸாக் (ஜவாத்) உட்பட திணைக்களத்  தலைவர்கள், துறைசார் அதிகாரிகள், சிவில் அமைப்புகளின் பிரதி நிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.