கபீர் ஹசீமின் பகீர் அறிவிப்பு



பிரதமர் குறித்த  தவறான தகவல்களை மக்களிடையே பரப்புவதை எந்த மட்டத்தினராக இருப்பினும் தவிர்த்துக்  கொள்ள வேண்டுமென ஐக்கியத் தேசியக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹஷீம் தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின்  பெயரைப் பயன்படுத்தி  மக்களிடையே  போலி வாக்குறுதிகளை  வழங்கி  மக்களை  ஏமாற்றும்செயல்களை முன்னெடுத்து வருவது கண்டிக்கத்தக்கது என கபீர் ஹஷீம்   மேலும் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு  மாவட்ட பட்டதாரிகளுக்கு விரைவில்  தீர்வுபெற்றுத் தருவதாக ரணில் விக்ரமசிங்க உறுதியளித்த்தாக மட்டக்களப்பு மாவட்ட அரசியல்வாதியொருவர் தெரிவித்தமை தொடர்பில் பட்டதாரிகள் சிலர் அமைச்சர் கபீர் ஹஷீமிடம் தொலைபேசி  மூலம் தொடர்பு கொண்டு வினவியபோதே  அவர் இதனைக்  கூறினார்.

ஆளுந்தரப்பில்  அமைச்சுப் பொறுப்புக்களை  வகிப்பவர்களே  பிரதமர் மற்றும் அரசாங்கத்தின் பெயரை கெடுக்கும் வகையில்  பொறுப்பற்ற வகையில்  நடந்து கொள்வது  ஊடாக நல்லாட்சி அரசாங்கம் மீதான தவறான புரிதல்களை ஏற்படுத்த  வழிவகுப்பதாகவும் அமைச்சர்  கபீர் ஹஷீம் கூறினார்.
பட்டதாரிகள்தொடர்பில்    பிரதமரிடம்  இது வரை  யாரும்  கலந்துரையாடவில்லை எனவும் நாட்டில் புதியதொழில் வாய்ப்புக்களை  ஏற்படுத்துவது  தொடர்பில்  அரசாங்கம் தறபோது  நடவடிகைளை முன்னெடுத்து வருவதாகவும்  அவர்  குறிப்பிட்டார்.

பட்டதாரிகளின் பிரச்சினை   ஒரு தேசிய ரீதியான  பிரச்சினை எனவும்  அது தொடர்பில்’ அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் வடக்கிலும் இந்தப் பிரச்சினை   தலை தூக்கியுள்ளதாக  அமைச்சர் கபீர் ஹஷீம் கூறினார்