போலி முகவர் நிலையம் மருதானையில் சுற்றிவளைப்பு; பதுர்தீன் எஸ்கேப்!



விமான பயணச்சீட்டுகள் வழங்கும் அலுவலகம் என்ற போர்வையில் நேற்று கொழும்பு மருதா னையில் போலி வெளிநாட்டு நிலையமொன்று சுற்றி வளைக்கப்பட்டு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு ள்ளதுடன் சந்தேக நபர்கள் தப்பியோடியுள்ளனர்.
வெளிநாடு செல்வதற்காக விமான நிலையத்துக்கு வந்த பெண்ணொருவரிடம் போலி கடவுச்சீட்டு மற்றும் போலி ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்ட போதே மேற்படி சட்டவிரோத முகவர் நிலையம் கண்டுபிடிக்கப்பட்டது.போலி கடவுச் சீட்டைவைத்திருந்தபெண்ணும்கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மருதானையில் இயங்கிவந்த மேற்படி போலி முகவர் நிலையத்தில் போலி ஆவணங்கள் தயாரித்து நபர்களை வெளிநாட்டுக்கு அனுப்புவது தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணைப்பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். அங்கிருந்து 30 போலி கடவுச்சீட்டுகளும் பல போலி ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளன.
இந்த சுற்றிவளைப்பின் போது போலி விமான பயணச் சீட்டு விநியோகித்த நிறுவனத்தின் உரிமையாளர் பதுர்தீன் சுஸான் முஹமாட் உஸ்தீ உசேன் கைதுச்செய்யப்படவிருந்த நிலையில் தப்பிச்சென்றுள்ளனர்.
இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை வெ.வே.பணியகத்தின் விசாரணைப்பிரிவின் மேற்கொண்டுவருகின்றனர்.