எம்.ஐ.அஸ்பாக்
சவூதி அரேபியாவின் றியாத் நகரில் உள்ள இலங்கைத்தூதுவராலயத்தில் இன்று திங்கற்கிழமை விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அந்நிகழ்வில் அல்-கிம்மா நிறுவனத்தின் தேசியத் தலைவர் சவூதி நாட்டைச்சேர்ந்த அஷ்ஷெய்க் முதீப் தவாப் அஸ்ஸபீயீ அவர்களும் அதிதிகளுள் ஒருவராக கலந்து கொண்டார்.
இதன் போது அல்-கிம்மா நிறுவனத்தின் தேசியத்தலைவர் சவூதிக்கான இலங்கை தூதுவர் முஹம்மத் அஸ்மி தாசீம் அவர்களுடன் சினேகித பூர்வ கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டார். அதன் போது எமது அல்-கிம்மா நிறுவனம் பற்றியும் நிறுவனத்தினால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதாபிமான பணிகள் பற்றியும் அவருக்குத் தெளிவுபடுத்தியதுடன் நிறுவனத்தின் நினைவுச்சின்னம் ஒன்றையும் தூதுவர் முஹம்மத் அஸ்மி தாசீம் அவர்களுக்கு அன்பளிப்புச் செய்தார்.
அல்-கிம்மா நிறுவனத்தின் சேவைகளைப் பாராட்டிய சவூதிக்கான இலங்கைத் தூதுவர் முஹம்மத் அஸ்மி தாசீம் அவர்கள் எதிர்வரும் காலங்களில் தன்னாலான உதவிகளை செய்வதாக கூறியதுடன் தனது இலங்கை வருகையின் போது நிறுவனத்திற்கு விஜயம் ஒன்றினையும் மேற்கொள்வதாக கூறியதுடன் நினைவுச்சின்னத்தையும் பெற்றுக் கொண்டார்.
