மர்ஹூம் அஸ்ரபிற்கு பிறகு தலைவர் என்றால் றிசாத் தான்; மக்கள்



மறைந்த தலைவர் மர்ஹூம் அஸ்ரபிற்கு பிறகு தலைவர் என்று சொல்லிக்கொள்ள தகுதியுள்ளவர் அமைச்சரி றிசாத் தான் என்று உளமாற சொன்ன வேப்பங்குள முஸ்லிம்களின் சம்பாசனை குறித்த பதிவே இது,

நேற்று வேப்பங்குளத்திற்கு விஜயம் செய்த சிலோன் முஸ்லிம் ஊடகம் உள்ளிட்ட அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களிடம் மனதார பேசிய வேப்பங்குள மக்கள் இவ்வாறு குறிப்பிட்டனர்.

எங்கள் ஊரை பார்ககையில் உங்களுக்கே கவலை வரும், எங்களுக்கு ஒருபக்கம் நிலப்பிரச்சினை, தண்ணீர் பிரச்சினை, வறுமை இப்படி அடுக்கடுக்கான ஆயிரம் பிரச்சினைள் இவைகளை கண்டுகொண்ட அன்றைய தலைவர் மர்ஹூம் அஸ்ரப் அவர்கள் எங்களை முன்னிலைக்கு கொண்டுவர பெரிதும் பாடுபட்டார், ஆனால் அவர் மறைவுக்கு பிறகு எங்களை யாரும் கண்டுகொள்ளவில்லை, எங்களிடம் வாக்குறுதிகள் மட்டும் வழங்கினர், எங்கள் ஊர் றிசாத் தம்பி இல்லாவிட்டால் எங்கள் முகவரி கேள்விக்குறியாகியிருக்கும் என்றனர்.

உண்மையில் வறுமையும. ஏனைய பிரச்சினைகளையும சூழ்ந்துள்ள வடபுல முஸ்லிம்களின் வாழ்வு ஒளிபெற அனைத்து முஸ்லிம் கட்சிகளும், ஊடகங்களும், அமைப்புகளும் முன்வரவேண்டும்.