முரண்பாடுகளுக்குள் ஹசனலியின் பகிரங்க கூட்டம்; வெள்ளியன்று நிந்தவூரில்!



முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மூத்த போராளியும் முன்னாள் செயலாளருமான ஹசனலி - கட்சியின் தலைவர் றவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் முரண்பாடுகளுக்கு மத்தியில் புதிய கட்சியா? அல்லது முஸ்லிம் காங்கிரசை மீட்டெடுப்பதா என்பது பற்றி சிந்திக்கும் பல போராளிகளுக்கு விடைசொல்லும் பகிரங்க பொதுக்கூட்டம் 03.03.2017 வெள்ளிக்கிழமை மாலை நிந்தவூரில் இடம்பெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினர்களான ஹரீஸ் எம்.பி, அட்டாளைச்சேனை அன்சில், நிந்தவூர் தாஹீர், பொததவில் வாசித் மற்றும்  தாஜூதீன், அக்கரைப்பற்று ஹனீபா மௌலவி உள்ளிட்ட பலர் மேடையேற வாய்பபுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.