ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும், நகர திட்டமிடல் மற்றம் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள், இம்மாத ஆரம்ப பகுதியில் சவூதி அரேபியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இவ்விஜயத்தின்போது, சவூதியிலுள்ள முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களை சந்திக்கும் நிகழ்வுகள் மார்ச் 10ஆம் திகதி ரியாத் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் கட்சிப் போராளிகள், சமூக சேவை அமைப்புக்கள், விளையாட்டு கழகங்கள் மற்றும் உள்ளூர் அமைப்புக்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இச்சந்திப்பில் கலந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் 0094774801215 என்ற வட்ஸ்அப் இலக்கம் அல்லது risvimoosa@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாக தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
