யார் இந்த பட்டதாரிகள்?


சஜீர் - அக்கரைப்பற்று

இலங்கையில் ஒவ்வொரு வருடமும் A/L பரிட்சையில் தோற்றுகின்ற சுமார் 250000 பேரில் பலத்த போட்டிக்கு மத்தியில் தெரிவு செய்யப்பட்ட சுமார் 25000 (அனைத்து துறையையும் சேர்த்து) பேருக்கு 4/5 வருட பட்டப்படிப்பில் கிடைக்கின்ற பட்டம்.
காலா காலமாக வீதியில் இறங்கி போராடி தான் தங்களின் தொழிலை பெற்று கொள்கின்றனர், அந்த வரிசையில் இன்று போராடும் இவர்கள் ஒன்றும் விதிவிலக்கல்ல,
இந்த போராட்டத்தை நக்கல் பண்ணுபவர்களில் அதிகமானோர் பரிட்சையில் தெரிவு செய்யப்பட்ட 25000 பேருக்குள் வர முடியாமல் தோற்று போனவர்களே என்பது ஒரு கசப்பான உண்மை (தெரிவு செய்ய படாதவர்களை கவலை படுத்தவில்லை) ,அது இறைவனின் நாட்டம்.
தனியார் துறைக்கு அவர்களை தொழில் தேடி செல்ல சொல்லுபவர்கள் கவனிக்க வேண்டியது, அவர்கள் ஒன்றும் முயற்சி செய்யாமல் இல்லை,ஆனால் தனியார் துறைக்கு தேவையான வடிவில் இவர்களின் தகமை அமையவில்லை, பல்கலைக்கழகங்களும் அதற்கான பாடத்திட்டம் மற்றும் Practical Training உருவாக்கவில்லை என்பதே கவலைக்குரிய விடயம் குறிப்பாக கலை துறை, மேலும் அவர்கள் சுய தொழில் செய்து தான் முன்னேற வேண்டுமாக இருந்தால் 4/5 வருடம் பல்கலைக்கழகம் செல்ல தேவை இல்லையே,வீட்டில் தாய்,தகப்பனுக்கும் சுமையாக இருந்திருக்கமாட்டார்கள்.
மேலும் அரசு ஒரு gazette வெளியிடுமாக இருந்தால்,அதாவது அரச பல்கலைக்கழகத்துக்கு செல்பவர்களுக்கு அரச துறையில் தொழில் வழங்க மாட்டோம், மாறாக பொதுவான திறந்த போட்டி பரீட்சை மூலம் மட்டும் தான் அரச ஆற்சேர்ப்பு இடம் பெறும் என்று, இப்படி வெளியிட்டால் அநேகமானோர் A/L உடன் படிப்பை மட்டுப்படுத்துவார்கள், “தாய் தகப்பனும்,பாடசாலை முடிந்த பின் பின்னேர பிரத்தியோக வகுப்பு இரவு 10 மணி வரை பிள்ளையை செலவு செய்து அனுப்பவும் மாட்டார்கள்.” மேலதிக பணம் உள்ளவர்கள் ஆசையிருந்தால் குறைந்த காலப்பகுதியில் (2/3 வருடம்) தனியார் துறையில் பட்டத்தையும் பூர்த்தி செய்வார்கள்.
அரச மருத்துவ கல்வி துறையை தனியாருக்கு வழங்க கூடாது என்று போராட்டம் நடத்துகின்ற நாம் தான் மறு பக்கம், அரச பல்கலைக்கழகத்தில் பயின்ற வேலையற்ற பட்டதாரிகளை அவர்கள் நடத்துகின்ற வேலைக்கான போராட்டத்தை இழிவு படுத்துகின்றோம்.

போராட்டங்களுக்குள்ளும் ஒவ்வொரு சாமான்யனின் வேதனைகளும், சுமைகளும் உண்டு - பஹத் ஏ.மஜீத்