விருப்பு வாக்குமுறையே சிறந்தது; எஸ்.எம் மரிக்கார்



அஷ்ரப் ஏ  சமத்
 
தற்போதைய  முறைமையில் உள்ள  விருப்பு வாக்குமுறையே இம்முறையும்  உள்ளுராட்சி தோ்தலை  நாடத்துவதே சிறந்தாகும். ஒரு முறையான தோ்தல் முறைமை  புதிதாக உருவாக்கப்படுத்தப்படல் வேண்டும்..   எதிா்வரும்  மாகாணசபை, பாராளுமன்ற  தோ்தல்கள் சம்பந்தமாகவும் ஒரு முறையானதும் சகலரும்  ஏற்கக் கூடிய வட்டார, கலப்பு முறை மற்றும் தோ்தல் தொகுதி முறைமை  இரண்டும் கலந்த     முறையை சகல அரசியல் கட்சிகள் பாராளுமன்ற  உறுப்பிணா்களும் ஏற்கக் கூடியவகையில் உருவாக்குவதே சாலச் சிறந்தாகும். என  பாராளுமன்ற உறுப்பிணா் எஸ்.எம் மரிக்காா் தெரிவித்தாா்.
மேற்கண்டவாறு இன்று (1) ஜ.தே.கட்சிியின் தலைமையகமான சிறிக்கொத்தவில் நடைபெற்ற  ஊடகவியலாளா் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவி்க்கையிலேயே பாராளுமன்ற உறுப்பிணா் எஸ்.எம். மரிக்காா் தெரிவித்தாா்.

அவா் அங்கு தொடா்ந்து கருத்து தெரிவிக்கையில் -
இம்முறை உள்ளுராட்சித் தோ்தலில் 5500க்கும் மேற்பட்ட உள்ளுராட்சி சபைகளின் பிரநிதிகளை 8 ஆயிரம் அதிகமாக அதிகாித்துள்ளனா். இதனால் பொது மக்களது பணம், வரி வீண்விரயமாகும். அத்துடன் எல்லை நிர்ணய முறைமையி பற்றியும் சிறுபாண்மையினா்களுக்கு அநீதி விளைவிக்கப்படுகின்றது. இவ்விடயத்தில் மாகாணசபைகள் உள்ளுராட்சி அமைச்சா் பைசா் முஸ்தபா தமது அறிக்கையை மீள் பரிசீலனை செய்யப்படுதல் வேண்டும்.
நாளை தோ்தல் நடைபெற்றாலும் ஜ.தே.கட்சியும்  வெற்றியடைவோ ம்.  ஆனால் ஸ்ரீ.ல.சு.கட்சியில் இருந்து கூட்டு எதிா்க்கட்சியினா் படுதோல்வியடைவாா்கள். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இந்த நாட்டினை அடகு வைத்து எடுக்கப்பட்ட கடன்களை எமதுஅரசு  பாரிய கடன்களை வட்டியுடன் செலுத்தி வருகின்றது.  2016 ஆண்டு   மட்டும்  18 28 பில்லியன்  கடன் செலுத்தப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு   2417  பில்லியன்  செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு 2019ஆம் ஆண்டு வரை செலுத்தல் வேண்டும். அத்துடன் இக் கடன் தொகை மும்மடங்காக 4000 பில்லியனாக அதிகாரிக்கின்றது. இலங்கையின் வரலாற்றில்  இவ்வாறானதொரு கடன் பெற்றமை மகிந்த ராஜபக்சவின் ஆட்சியிலாகும்.
எமது அரசு ஆட்சிக்கு வந்து ஜி.எஸ்.பி  சலுகை கூடுதலான வெளிநாட்டு முதலீட்டாளாா்கள் , சுற்றுலாத்துறை முன்னேறி வருவதை தடுப்பதற்காகவே கூட்டு எதிா்கட்சியினா்  இதனை தடுப்பதற்கு   ஆங்காங்கே ஆர்பாட்டங்களை ஏற்படுத்தி  முதலீட்டாளா்களை சுற்றுலாத்துறையினா் தடுக்க முயற்சிக்கின்றனா்.
இந்த ஆட்சியினை ஏற்படுத்தியது  ஜ. தே.கட்சி கூட்டுக் கட்சிகளாகும்.   2020ஆம் ஆண்டு அடுத்த  பாராளுமன்ற தோ்தல் வரும் மட்டும்  இதனை யாராளும் தடுக்கவோ  குருக்கு வழியில் ஆட்சிக்கு வரவோ முடியாது.  மேலும் பாராளுமன்றத்தில் ஊடாக  வட கிழக்கு பிரச்சினைக்கு புதிய அரசியல் அமைப்பு ஊடாக தீா்வு பெற்றுக் கொடுக்கப்படும்.  ஒரே நாடு ஒரு தாய் மக்கள் என்ற போா்வையில் இந்த அரசே எதிா்கட்சித் ்தலைவா் இரா சம்பந்தன் ஊடாக கடந்த ஆண்டு சுதந்திரம் கொண்டாடப்பட்டது. தனி நாடு ஈ  ழம் என்ற கோசத்தை கைவிட்டு எல்லோரும் இலங்கையா் என்ற குடையின் கீழ் ஒன்று சோ்த்து வைத்தது இந்த ஆட்சியிலாகும். என எஸ் எம் மரிககாா் தெரிவித்தாா்.