ஓ.எல். பெறுபேறு ; இரு முஸ்லிம் மாணவிகள் தற்கொலைக்கு முயற்சி

NEWS
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் எதிர்பார்த்த பெறுபேறுகள் கிடைக்காததால் இரு முஸ்லிம் மாணவிகளும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரும் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

கம்பளை பிரதேசத்தில் பிரபல பாடசாலையில் கல்வி பயிலும் மாணவிகளே இவ்வாறு தமது உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றுள்ளனர்.

எனினும் இவர்கள் உடன் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களது உடல் நிலை தேறி வருவதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
Tags
3/related/default