தாருஸ்ஸலாம் பாதுகாப்பிற்கு ஹக்கீமின் காடையர்கள் பணி; ஹசனலியின் அறிவிப்பு

NEWS


– முன்ஸிப் அஹமட் –

னது செயலாளர் நாயகம் பதவியை பறித்தெடுத்த கட்டாய உயர்பீடக் கூட்டம் மு.கா.வின் தலைமையகம் தாருஸ்ஸலாமில் நடந்தபோது,  அந்தக் கட்டிடத்துக்கு முன்பாக காடையர்கள் நிறுத்தப்பட்டிருந்தார்கள் என, முன்னாள் ராஜாங்க அமைச்சர் எம்.ரி. ஹசனலி திடுக்கிடும் தகவலொன்றினைத் தெரிவித்தார்.
அந்தக் கூட்டத்தில் தனக்கு இழைக்கப்பட்ட அநியாயத்தை நினைத்து, அழுதபடி தான் வெளியேறிய வேளையில், தாருஸ்ஸலாம் முன்பாக நான்கு முச்சக்கர வண்டிகளில் வந்திறங்கிய காடையர்கள் தன்னைத் தாக்குவதற்கு முயன்றதாகவும், இதன்போது தான் காப்பாற்றப்பட்டதாகவும் ஹசனலி கூறினார்.
பொத்துவிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பகிரங்கக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, ஹசனலி இந்த விடயத்தினை வெளிப்படுத்தினார்.
“கூட்டத்திலிருந்து நான் வெளியேறியபோது, போக வேண்டாம் என்று கூறி என்னைத் தடுப்பதற்காக, சில உயர்பீட உறுப்பினர்கள் எனது பின்னால் வந்தார்கள். அவர்கள்தான் அந்தக் காடையர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றினார்கள்.
முஸ்லிம் காங்கிரசின் கட்டாய உயர்பீடக் கூட்டத்தை, காடையர்களை வைத்துக் கொண்டு நடத்தும் நிலை ஏற்பட்டிருப்பது எவ்வளவு கேவலமானது.
கட்டாய உயர்பீடக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் பொருட்டு கட்சியின் தலைமையகத்துக்கு வந்தவர்களில், ஹக்கீமோடு கருத்து முரண்பட்டவர்கள் காடையர்களுக்கு அடையாளம் காட்டப்பட்டார்கள். அவர்கள் அந்தக் கூட்டத்தில் முரண்படாமையினால் தப்பித்துக் கொண்டார்கள்” என்றார்.
(நன்றி - புதிது)
3/related/default