பாடசாலைகளுக்கு வெளியே இளைஞர்கள் மத்தியில் பாபுல், வரான்ஸ் மற்றும் போதைப் பொருள் பாவனைகள் அதிகரித்துள்ளன.
இதனை தடுக்க அரசாங்கம் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது என்று அமைச்சர் சாகல ரத்னாயக்க நேற்று சபையில் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி.யான புத்திக பத்திரண செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது சட்டம், ஒழுங்கு மற்றும் தென் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயகவிடம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கஞ்சா, அபின், போதை மாத்திரைகள், பாணிமருந்து மற்றும் அதனையொத்த போதைப் பொருட்கள் சமூகத்தில் துரிதமாக பரவியுள்ளதாக சுட்டிக்காட்டப்படடே கேள்வி எழுப்பப்பட்டது.
அமைச்சர் சாகல ரத்னாயக்க வழங்கிய பதிலில் மேலும் தெரிவிக்கையில்;
பாடசாலைகளுக்குள் போதைப் பொருள் பாவனை தொடர்பாக தகவல்கள் கிடைக்கவில்லை. ஆனால் பாடசாலைகளுக்கு வெளியே உல்லாசப் பிரயாணத்துறை ஹோட்டல்கள் உள்ள பிரதேசங்களிலும் சில பிரபல்யமான இடங்களிலும் இளைஞர்கள் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுவது தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளன.
இது அதிகரித்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, இதனை கட்டுப்படுத்தவும் தடுப்பதற்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன என அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.
இதன்போது குறுக்கிட்ட புத்திக பத்திரண எம்.பி. சில பாடசாலைகளில் உயர்வகுப்பு மாணவர்கள் கஞ்சா பாவித்த பின்னர் வகுப்பறைகளுக்கு வருவதாக எனக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இது தொடர்பில் உங்களுக்கு முறைப்பாடுகள் கிடைக்கவில்லையா என அமைச்சரிடம் கேட்டார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் சாகல ரத்னாயக்க எம்.பி. சொன்னது போன்று முறைப்பாடுகள் கிடைத்தால் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

(விடிவெள்ளி)