சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கட்சியின் தேசியப்பட்டியலை அட்டாளைச்சேனைக்கு வழங்க தீர்மானித்திருப்பதாக தெரியவருகிறது.
கட்சியின் நிகழ்கால நடவடிக்கை குறித்து ஆராய்ந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரியவருகிறது, முன்னாள் செயலாளர் நாயகம் ஹசனலி கட்சியை விட்டு துாரமாகிய காரணத்தினாலும் கட்சித் தலைமைக்கு எதிராக செயற்படுவதாலும் அவருக்கு வழங்கப்படவிருந்த தேசியப்பட்டியல் தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளித்தவாறு அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு அதுவும் மகாண சுகாதார அமைச்சர் நஸீர் அவர்களுக்கு வழங்க முடிவாகியிருப்பதாக அறியக்கிடைக்கிறது.
இதற்கான முன்னறிவிப்புகள் மகாண சுகாதார அமைச்சர் நஸீருக்கு வழங்கப்பட்டுள்ளதாம், இவரின் மாகாண அமைச்சு மாகாண சபை உறுப்பினர் ஜவாதிற்கு வழங்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
இவையனைத்தும் ஹசனலி அணியினரின் செயற்பாடுகளால்தான் என கட்சி ஆதரவாளர்களால் பேசப்படுகிறது.