தொடரும் குப்பை பிரச்சினை

எம்.பி.எம் பைறுாஸ்

நாடு எதிர்­நோக்கும் பிர­தான, அன்­றாட பிரச்­சி­னை­களுள் ஒன்­றாக திண்மக் கழி­வ­கற்றல் (குப்பை) விவகாரம் மாறி­யுள்­ளது.



அதிலும் குறிப்­பாக கொழும்பு நகரம் எதிர்­நோக்கும் திண்மக் கழி­வ­கற்றல் நெருக்­கடி பாரிய பிரச்­சி­னை­யாக உரு­வெ­டுத்­துள்­ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் தொடராக ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். நேற்றும் அவ்வாறானதொரு ஆர்ப்பாட்டம் மீதொடமுல்ல மக்களால் வீதியை மறித்து முன்னெடுக்கப்பட்டது.

தற்­ச­மயம் கொலன்­னாவ பிர­தேச சபைக்­குட்­பட்ட மீதொட்­ட­முல்ல பகு­தி­யி­லேயே கொழும்பில் சேக­ரிக்­கப்­படும் குப்­பைகள் கொட்­டப்­ப­டு­கின்­றன. இதன்­கா­ர­ண­மாக அப் பகு­தியே குப்பை மலை­யாகக் காட்­சி­ய­ளிக்­கி­றது. இதனால் அப் பகு­தியைச் சூழ வாழும் மக்கள் பாரிய நெருக்­க­டி­களை எதிர்­கொண்­டுள்­ளனர்.

மீதொட்­ட­முல்ல பகு­தியில் சுமார் 28 ஏக்கர் நிலப்­ப­ரப்பில் தினமும் 850 மெற்றிக் தொன் குப்­பைகள் கொட்­டப்­ப­டு­கின்­றன. இதன் கார­ண­மாக அப் பகு­தியைச் சூழ­வுள்ள 8 கிராம சேவகர் பகு­தி­களில் வாழும் 8700 குடும்­பங்­களைச் சேர்ந்த 39 ஆயிரம் மக்கள் பாதிப்­புக்­களைச் சந்­தித்­துள்­ளனர். இம் மக்கள் பாரிய நோய்­க­ளுக்கு முகங்­கொ­டுத்து வரு­வ­துடன் வீடு­களில் வசிக்க முடி­யா­மலும் இப் பகு­தி­க­ளி­லுள்ள பாட­சா­லை­களில் மாண­வர்­களின் கல்­வியைத் தொடர முடி­யா­மலும் கஷ்­டங்­களை எதிர்­நோக்­கு­வ­தாக சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கி­றது.
 
இந் நிலையில் குறித்த பகுதி மக்கள் அண்­மைக்­கா­ல­மாக பாரிய போராட்­டங்­களை நடாத்தி வந்­ததைத் தொடர்ந்து பொலிசார் நீதி­மன்றில் வழக்­கொன்றை தாக்கல் செய்­தனர்.

இதற்­க­மைய மீதொட்­ட­முல்­லையில் உள்ள குப்பை மலை­களை கூடிய விரை­வாக கொழும்பு மாந­கர சபை அகற்ற வேண்டும் என கொழும்பு மஜிஸ்­திரேட் நீதி­மன்றம் அண்மையில் உத்­த­ர­விட்­டுள்­ளது. இருந்­த­போ­திலும் இக் குப்­பை­களை எங்கு கொண்டு சென்று கொட்­டு­வது என்­பதில் அர­சாங்கம் பாரிய சிக்­கல்­களை எதிர்­கொண்­டுள்­ளது. தற்­ச­மயம் ஜாஎ­ல-­,ஏக்­கல பகு­தியில் காணி ஒன்று அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்டு அங்கு குப்­பை­களை கொட்­டு­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்ட போதிலும் அப் பகுதி மக்­களும் இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்­டுள்­ளனர்.

அதே­போன்று ரயில் மூல­மாக குப்­பை­களை புத்­தளம் மாவட்­டத்­திற்­குட்­பட்ட வில்­பத்து தேசிய வனத்தின் அருகே கொட்­டு­வ­தற்கு 'மெகாபொலிஸ்' அமைச்­சினால் முன்­வைக்­கப்­பட்ட யோச­னை­களும் எதிர்ப்பைச் சம்­பா­தித்­துள்­ளன. புத்­தளம் மாவட்ட மக்கள் மாத்­தி­ர­மன்றி சூழ­லி­ய­லா­ளர்­களும் இதற்கு எதிர்ப்பு வெளியிட்­டுள்­ளனர்.

இந் நிலையில் அர­சாங்­கமும் இது விட­யத்தில் உட­னடித் தீர்­வொன்றைக் காண முடி­யாத சங்­க­டத்தை எதிர்­கொண்­டுள்­ளதை அவ­தா­னிக்க முடி­கி­றது.

மீதொட்­ட­முல்ல குப்பை விவ­காரம் தொடர்பில் தான் பல முறை ஜனா­தி­ப­தி­யி­டமும் பிர­த­ம­ரி­டமும் எடுத்துக் கூறியும் எந்­த­வித தீர்­வையும் பெற்றுக் கொள்ள முடி­யா­துள்­ள­தாக கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரி­வித்­துள்ளார்.

எது ­எப்­ப­டி­யி­ருப்­பினும் அர­சாங்கம் பெரும் தலை­யி­டி­யாக மாறி­யுள்ள இந்தக் குப்பைப் பிரச்­சி­னைக்கு தீர்வு காண வேண்டும்.

குப்பைகளை இன்னொரு இடத்தில் கொண்டு சென்று கொண்டி அங்கும் குப்பை மலைகளை தோற்றுவிப்பதைவிடுத்து மீள்சுழற்சிக்குட்படுத்தல், மின்சாரம் உள்ளிட்ட சக்தி வளங்களை உற்பத்தி செய்தல் போன்ற நவீன திட்டங்கள் குறித்து பரிசீலிக்க வேண்டும். அதுவே இதற்கான நிரந்தரத் தீர்வாக அமையும்.