பி.தயாரத்னவுக்கு எதிராக தாஜூதீன் கடும் நடவடிக்கை; ஒன்றிணையுமாறு அழைப்பு



பொத்துவில் பிரதான வீதியில் பஸ் டிப்போவுக்கு முன்னால் அமைந்துள்ள பல கோடி ரூபா பெருமதியான அரச காணியை முன்னாள் அமைச்சர் பீ.தயாரட்டண தன் சொந்த தேவைக்காக கபளிகரம் செய்யப்போவதை கண்டித்தும் மீண்;டும் அக் காணியை பொதுத் தேவைக்கு பயன் படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கக்; கோரி ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு ; எழுத்து மூலம் பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் உதவித் தவிசாளர் ஏ.எம்.தாஜூதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இக் காணியானது 1928 ஒக்டோபர்22ம் திகதி ஜோஐ; மோல்ரீமர் கிரேப் என்பவருக்கு நீண்ட கால குத்தகைக்கு வழங்கப்பட்டன.இதனைத் தொடர்ந்து பத்து நபர்கள் உரிய காணியை மாறி மாறி குத்தகைக்கு பெற்று வந்தனர்.

காணித் திணைக்களம் 2011.06.23ம் திகதி இக் காணியின் நீண்ட கால குத்தகையை இரத்து செய்து அரச உடமையாக்கியது.

தற்போது காணப்படும் பொத்துவில் பொதுத் தேவையான வலயக் கல்விப் பணிப்பாளர் காரியாலயம்,நீதிமன்ற ஊழியர்களின் விடுதி,வைத்தியர்களின் தங்குமிட கட்டிடம் என இன்னும் பல்வேறு தேவையுடைய கட்டிடங்கள் இக் காணியில் அமைப்பதற்கான போதிய நிலங்கள் காணப்படுகின்றன.

இருந்த போதும் நீண்ட கால குத்தகைக் காலப்பகுதியில் பீ.தயாரட்டன காணி அமைச்சராக இருந்த சந்தர்ப்பத்தில் இக் காணிக்குறிய போலியான ஆவணங்களை தனது சொந்தப் பெயரில் தயாரித்துள்ளார்.

போலியான ஆவணத்தை மக்கள் மத்தியில் காட்டி அச்சுறுத்தி,காணியில் பலத்காரமாக உட்புகுந்து வேலியும் அமைத்துள்ளதோடு வேறு ஒரு நபருக்கும் இக் காணியை விற்பதற்கும் முயற்சி செய்து வருவதாகவும் அறிய முடிகிறது.
பொத்துவில் மக்களுக்கு சொந்தமான இக் காணியை தனிநபர் உரிமை கோருவதை எக்காரணம் கொண்டு அனுமதிக்க முடியாத காரணத்தினால் பொத்துவில் பிரதேச மக்கள் இன்று கிளர்ந்து எழுந்துள்ளனர.

நல்லாட்சியின் தலைவர் மாண்புமிகு ஜனாதிபதி அவர்களே இக் குறிப்பிட்ட அரச காணியை பொதுத் தேவைக்காக பயன் படுத்துவதற்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொள்வதுடன் காணியை கபளீகரம் செய்து முறைகேடான ஆவணங்களை வைத்திருப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொத்துவில் மக்கள் சார்பாக அன்புடன் வேண்டிக் கொள்கிறேன் என முன்னாள் உதவித் தவிசாளர் ஏ.எம்.தாஜூதீன் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்