இன்று தைக்காநகர் அஸ்ஸஹ்ரா பாடசாலையின் இல்ல விளையாட்டுப்போட்டி தைக்காநகர் எவர் டொப் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
அதிதிகளாக மகாகண அமைச்சர் நஸீர், மாகாண சபை உறுப்பினர் ஏ.எல் தவம், எதிர்க்கட்சி தலைவர் உதுமாலெவ்வை ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வு ஆரம்பத்தின் பின்னர மேடைக்கு சென்ற மூவரும் அருகருகே அமர்ந்திருந்தனர், ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமலே தங்களது மொபல்களை பார்த்த வண்ணம் இருந்தனர், இந்தவேளை எமது பிரதம ஆசிரியர் பஹத் ஏ.மஜீத் மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் உதுாலெவ்வையிடம் ஏன் ஒருவருக்கொருவர் பேசாமல் இருக்கின்றீர்கள் என்று கேட்டதற்கு,
நான் பேசுவேன், அவர்கள் பேச தயாரில்லை என்று தவத்தை காட்டி சொன்னார் அதற்கு தவம், சதிமானக்காரர்களுடன் பேச தயாரில்லை என்று கூறினார் பின்னர் மூவரும் மீண்டும் ஒருவருக்கொருவர் பேசாமல் அமர்ந்திருந்தனர்.
