இலங்கை முஸ்­லிம்­களின் நிலை கண்டு நான் அதிர்ச்­சி­ய­டைந்தேன்; றீடா ஐசக்

NEWS


இலங்கை முஸ்­லிம்­களின் நிலை­கண்டு தாம் அதிர்ச்­சி­ய­டைந்­த­தாக ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின், சிறு­பான்மை விவ­கா­ரங்­க­ளுக்­கான பிர­தி­நிதி றீட்டா ஐசக் தெரி­வித்தார்.

ஜெனிவாவில் அமைந்­துள்ள மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின்  அலு­வ­ல­கத்தில் 14 ஆம் திகதி,  செவ்­வாய்­க்கி­ழமை நடை­பெற்ற சர்­வ­தேச  யாழ்ப்­பாண முஸ்லிம் அமைப்பின் கலந்­து­ரை­யா­டலின் போதே  அவர் இதனைத் தெரி­வித்தார்.

அனீஸ் ரவூப் தலை­மை­யி­லான இந்த சர்­வ­தேச அமைப்­பினர் இலங்­கையில் சட்­டத்தின் ஆட்சி, நீதி வழங்­கு­தலில் நிலவும் தாமதம், வடக்கு முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்றம், மீள்­கு­டி­யேற்­றத்தில் உள்ள தாமதம், புறக்­க­ணிப்பு, யாழ்ப்­பாண முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக

மேற்­கொள்­ளப்­பட்ட இனச்­சுத்­தி­க­ரிப்பு அவ­லங்­களை சுமந்­து­நிற்கும் அந்த சமூ­கத்­தி­ன­ருக்கு அக­தி­க­ளுக்­கான அந்­தஸ்த்து இது­வரை கிடைக்­காமை, யாழ்ப்­பாண முஸ்லிம்  விவ­கா­ரத்தில் வட­மா­காண சபையின் இழுத்­த­டிப்பு, பௌத்த சிங்­கள இன­வா­தி­களின் வெறுப்புப் பேச்சு, அதற்­கெ­தி­ராக சட்­ட­ந­ட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­டாமை, அளுத்­கம விவ­கா­ரத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு நீதி மறுக்­கப்­பட்­டமை உள்­ளிட்ட பல்­வேறு விவ­கா­ரங்­களை றீட்டா ஐசக்கின் கவ­னத்­திற்கு கொண்­டு­வந்­தனர்.

இவற்றை கவ­ன­மாக செவி­ம­டுத்து, குறிப்­பெ­டுத்­துக்­கொண்ட மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின்  சிறுபான்மை விவ­கார பிர­தி­நிதி றீட்டா ஐசக், இலங்கை முஸ்­லிம்கள் குறித்து தனது பிந்­திய அறிக்­கையை  ஞாப­க­மூட்­டி­ய­துடன், இலங்­கைக்­கான தனது பய­ணத்தின் போது இலங்கை முஸ்­லிம்­களின் நிலை­கண்டு தாம் அதிர்ச்­சி­ய­டைந்­த­தாக குறிப்­பிட்டார்.

அத்­துடன் தாம் எதிர்­வரும் காலங்­களில் இலங்கை முஸ்­லிம்கள் பற்றி தொடர்ந்து குரல் கொடுப்­ப­தா­கவும், தமது பரிந்­து­ரை­களை இலங்கை அர­சாங்கம் அமுல்­ப­டுத்த வேண்­டு­மென அழுத்தம் கொடுக்­க­வுள்­ள­தா­கவும், அதனை மேற்­பார்வை செய்­ய­வுள்­ள­தா­கவும் திட்­ட­வட்­ட­மாக தெரி­வித்தார்.

மேலும் இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான செயற்­பா­டு­களை தாம் அவ­தா­னிப்­ப­தா­கவும், அளுத்­கம விவ­கா­ரத்தில் நீதி மறுக்­கப்­பட்­ட­மையை தாம் உணர்­வ­தா­கவும் றீட்டா ஐசக் ஒப்­புக்­கொண்டார்.

சுமார் 40 நிமி­டங்கள் நீடித்த றீட்டா ஐசக் மற்றும் சர்வதேச யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்திற்கிடையிலான பேச்சின் இறுதியில், பேசப்பட்ட விவகாரங்கள் ஆவண வடிவிலும்,  யாழ்ப்பாண முஸ்லிம்களின்  மீள்குடியேற்றம் வீடமைப்பு உள்ளிட்டவைகள் அடங்கிய விடயங்கள் அறிக்கை வடிவிலும் கையளிக்கப்பட்டன. (நன்றி - விடிவெள்ளி)
Tags
3/related/default