ஹூனுப்பிட்டிய திப்திகொட அல் முகையதீன் அகதியா பாடசாலையின் பரிசளிப்பு விழா

NEWS
அஷ்ரப் ஏ சமத்

வத்தளை ஹூனுப்பிட்டிய திப்திகொட  அல் முகையதீன் அகதியா பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு  ஹூனுப்பிட்டிய சாந்தி மண்டபத்தில் அகதியா பாடசாலையின் அதிபா் முஜிபு ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில்  பொலிஸ் அதிகாரி பண்டார,  பிரதம பேச்சாளராக  எம். தஹ்லான் ஆகியோறும் கலந்து கொண்டனா்  மாணவா்களது இஸ்லாமிய நிகழ்வுகள் மற்றும் பரிசலிப்புக்களும் இடம் பெற்றன.
இங்கு உரையாற்றிய  பொலிஸ் அதிகாரி   பண்டார - உரையாற்றுகையில் -   இந்த நிகழ்வுக்கு வரு முன்  ஒரு முச்சக்கர வண்டியை நிறுத்தி பரிசோதித்தேன்  உங்களது பிள்ளைகாளான 18,17 வயது மாணவா்களது  காற்சட்டைக்குள் இரண்டு சிறிய கஞ்சா இருந்தது.  ஆகவே பெற்றோா்களாகிய நீங்கள் உங்களது குழந்தைகளை கண்னும் கருத்துமாக வைத்துக் கொள்ளுங்கள். அவா்களுக்கு   மாா்க்கக் கல்வியை புகட்டி  போதைவஸ்து, குற்றங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.  வீடுகளில் தாய் , தந்தை பிள்ளைகள் என்ற பிணைப்பு இல்லாமல்  கையடக்க தொலைபேசியினால் தள்ளி இருக்கின்றனா். தனது பாசப் பிணைப்புக்கள்  பிரிந்து செல்கின்றனர்.   தமது பிள்ளையை  தகப்பன் நல்ல் நண்பன் போல பழகுங்கள் அவர் 24 மணித்தியாலயமும் வட்சாப், முகநுால்களிலேயே காலத்தை கழிக்கின்றாா். அவரின் முக நுாலின் நண்பா்கள் ஒரு கெட்ட நண்பராக இருந்தால் அவர் இளைஞா் பவருத்தில் சீராகிப் போகிவிடுவாா். குற்றங்கள், போதைவஸ்த்து, இளவயதில் பாழியல் போன்ற வற்றில் ஈடுபட சா்ந்தர்ப்பம் உண்டு.  இதனை மாா்க்க ரீதியாகாவும் ஆண்மீக ரீதியாகவும்  தமது பிள்ளைச் செல்வங்களை சீர் சிருத்துங்கள்.  என பொலிஸ் அதிகாரி பண்டடார  அங்கு உரையாற்றினாா்.



Tags
3/related/default