அஷ்ரபின் மரணம் தொடர்பில் விரைவில் விசாரணை; ஜனாதிபதி செயலகம்


தலைவர் அஷ்ரஃப் அவர்களது மரணம் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையைத் தருமாறு ஜனாதிபதி காரியாலயத்திடம் பசீர் சேகுதாவூத் கோரியிருந்ததையும் அதற்கான  பதிலை 17.02 .2017 அன்று அவர் பெற்றுக் கொண்டதையும் அறிவீர்கள்.
இப்பதிலுக்கு மேலதிகமாக இன்று கீழ்காணும் பதில் கடிதமும் ஜனாதிபதி காரியாலய தகவல் அலுவலரிடம் இருந்து அவருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது

இக்கடிதத்தில்,  வேண்டுகோளை நிறைவேற்றுவதற்காக ஆணைக்குழு அறிக்கை அடங்கியுள் கோவையை ஜனாதிபதி காரியாலயத்துக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டு தேசிய சுவடிக்கூடத் திணைக்களத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும்,
 கோரிக்கைக்கான மறுமொழி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது் மேலும், இத்தகவலை வழங்க குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படும் எனவும் கேட்கப்பட்டுள்ளது.