மக்கள் பணிக்காக உயிரைத்தியாகம் செய்யவும் தயார் - அதிபர் றியாஸ் சூளுரை



மனிதன் புனிதனாக வாழும் மார்க்கம் இஸ்லாம் இந்த மார்க்கத்தை பின்பற்றும் நாங்கள் ஏனைய மதங்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் மாறாக தங்களுக்குள் முண்டியடித்து முஸ்லிம் என்ற தனித்துவத்தை இழந்துவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதுதான் எமது முஸ்லிம் சமூகம் பின்நிலைக்கு தள்ளப்படுவதற்கான காரணம் என்று கவலையுடன் எமது செய்தி பிரிவற்கு கருத்துரைத்தார் மீலாத் நகர் பாடசாலை அதிபர் எம்.ஐ.எம் றியாஸ், ஒரு சில விசமக்கருத்துக்கள் இணைய தளங்களில் பரவிக்கொண்டிருக்கிறது குறிப்பாக எமது பிரதேச பாடசாலைகள் பற்றி!

 இது பற்றி பல விடயங்களை நான் உங்களுக்கு சொல்ல வேண்டும்.

ஊடகத்துறை என்பது சான்றிதழ், டிப்ளோமா, பட்டப்படிப்பு, முதுமானி வரையுள்ள பாரிய துறை இத்துறை இன்று ஒரு சில கொப்பி பேஸ்ட் தளங்களால் கேலியுறுகிறது. இதை தடுக்கவும் முடியாது. ஒருசிலர் வெப் தளங்களை உருவாக்கி அதன் மூலம் அரசியல் வியாபாரம் செய்து எந்தவித ஊடக அடிப்படை அறிவுமற்று ஊடக பணிப்பாளர் என தங்களை புகழ்மாலை சூடுகின்றனர்.

இவர்கள் பல பொய் பிரச்சாரங்களை பொய் பேக் ஐடிக்கில் இருந்து திரிவுபடுத்தி வலைத்தளங்களில் பரவ விடுகின்றனர். இவர்கள்தான் சமூகத்தின் சாபக்கேடு.

எழுத்து என்பது புனிதமானது இதனை சரியாக பயன்படுத்தவேண்டும்.

ஒரு அதிபராக இருந்து எனக்கு வழங்கப்பட்ட  இறைவனின் அமானிதத்தை நான் சரிவர செய்துவருகிறேன்,

இதற்கும் மேலதிகமாக எனது பிரதேச விளையாட்டுக்கழகங்கள் சமூக அமைப்புக்களை சரியான கட்டமைப்புக்குள் கொண்டுவந்திருக்கிறேன்.

இந்த பணியில் உயிரைத்தியாகம் செய்தாவது சமூகத்தை நல்ல வழிக்கு கொண்டு செல்வேன். இதுவே எனது குறிக்கோள் இதற்கு அரசியல் அதிகாரம்தான் தேவை என்றால் அதனையும் எடுக்கநான் பின்நிற்க மாட்டேன்.

எதிர்வரும் உள்ளுராட்சி சபைத்தேர்தல் இதற்கு சரியான பாடமாக இருக்கும் என நம்புகிறேன். போட்டோக்கள் எடுத்து பேஸ்புக்கில் போட்டு அரசியல் சமூகப்பணி செய்ய வேண்டிய அவசியம் எனக்கில்லை என்றார்.