தரமில்லாத பொலித்தீனுக்கு 10 லட்சம் ரூபா தண்டம் - மத்திய சூழல் அதிகாரசபை



தரமில்லாத பொலித்தீன் பாவனையைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய சூழல் அதிகார சபை புதிய யோசனையொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

மத்திய சூழல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கே.எச். முதுகுட ஆராச்சி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது,
“ எமக்கு தரமில்லாத பொலித்தீன் உற்பத்தியை தடை செய்வதற்கு அதிகாரம் உள்ளது. அதேபோன்று, தற்பொழுது தரமில்லாத பொலித்தீனுக்கான தண்டப் பணமாக 10 ஆயிரம் ரூபாவே  அறவிடப்படுகின்றது.

இந்த தண்டப் பணத்தை ஒரு மில்லியன் ரூபாவாக அதிகரிக்க தீர்மானித்துள்ளோம். இதற்கான பாராளுமன்ற அனுமதியை சட்டமூலம் ஒன்றைச் சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளவுள்ளோம்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்