ஆப்கானிஸ்தானில் இராணுவத்தினரை இலக்கு வைத்து தலிபான் ஆயுததாரிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் நுாற்றுக்கணக்கானவர்கள் உயிரழந்ததையடுத்து, அங்கு தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று முன் தினம் ஆப்கானிஸ்தானில் மஷார் இ ஷெரிப் நகரில் அமைந்துள்ள இராணுவ தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 140 க்கும் அதிகமானோர் உயிரிழந்திருந்ததுடன் நூறிற்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருந்தனர்.
இராணுவ வீரர்கள் தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு சென்ற போதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 10 தலிபான் ஆயுததாரிகள் ஈடுபட்டதாகவும் அவர்களில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் ஜனாதாிபதி தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளதோடு தேசிய துக்க தினத்தையும் பிரகடனப்படுத்தியுள்ளார்.
கடந்த ஏப்ரல் 17 ஆம் திகதி அமெரிக்காவின் ஆதரவோடு தலிபான்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.
