பாகிஸ்தானில், பயணித்துக்கொண்டிருந்த வேன் ஒன்றில், சக்திவாய்ந்த குண்டு ஒன்று வெடிக்கசெய்ப்பட்டத்தில், குழந்தைகள் உட்பட,10 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.
அந்நாட்டில், பழங்குடிகள் அதிகம் வசித்து வரும், பெஷாவரில் கோதார் என்ற பகுதியில்,பயணித்துக்கொண்டிருந்த வேன் ஒன்றிலேயே, இவ்வாறு குண்டு வெடித்துள்ளது.
குறித்த சம்பவத்தில், வேனில் இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், 15 இற்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ரிமோட் கட்டுப்பாடு மூலம் வெடிக்கும் குண்டுகளை தீவிரவாதிகள் பயன்படுத்தி, குண்டை வெடிக்க செய்தருக்கலாம் என அந்நாட்டு பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. எனினும். இத்தாக்குதலுக்கு இதுவரையில் எந்தவொரு தீவிரவாத இயக்கமும் இதுவரையில் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றிகள் live360