4000 அரச பணியாளர்கள் பதவிநீக்கம்

NEWS


கடந்த ஆண்டு ஜுலை மாதம் அரசுக்கு எதிராக துருக்கியில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ புரட்சிக்கு உதவிய 4000 இற்கும் மேற்பட்ட அரச பணியாளர்கள் ஜனாதிபதி எர்டோகனால் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இராணுவம் மற்றும் பொலிஸ்துறைகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தற்போது 4 ஆயிரம் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

அவர்களில் 1000 பேர் நீதித்துறை அமைச்சகத்தை சேர்ந்தவர்கள் என்றும்,ஏனையவர்கள் இராணுவம் மற்றும் விமானப்படை விமானிகள் என 100இற்கும் மேற்பட்டோர் அடங்குவதாகவும் துருக்கி தகவல்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை ஏற்கனவே 9 ஆயிரம் பொலிஸ் அதிகாரிகள் தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை அதிக அதிகாரங்களை கைப்பற்ற நாட்டில் ஜனாதிபதி ஆட்சி முறையை எர்டோகன் கொண்டுவந்ததுடன்,அதற்கான கருத்துக்கணிப்பில் அவர் வெற்றியும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

LIVE360
Tags
3/related/default