கிர்கிஸ்தானில் நிலச்சரிவு 24பேர் பலி

NEWS


மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தானின் உஸ்ஜென் மாவட்டத்தில் உள்ள ஓஷ் பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதhல் 24 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 9 குழந்தைகள் உட்பட 20 பேர் வரை காணாமல் போயிருப்பதாக அந்நாட்டின் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

காணமல் போனவர்களை தேடும் பணியை மீட்புப் படையினர் முடுக்கிவிட்டுள்ளதாகவும், கடந்த மாதம் இப்பகுதியில் நிலச்சரி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 LIVE360
Tags
3/related/default