பாவா ஆதம் மலை மெல்ல மறக்கப்படும் நமது வரலாறு

.
பாவா ஆதம் மலை மனித இன வர­லாற்றின் பல இரக­சி­யங்கள் புதைந்­துள்ள இடம். சர்­வ­தேச ஆங்­கில இலக்­கி­யங்­களில் Adam's peak என்றும் அரபு இலக்­கி­யங்­களில் “ஜபல் ஆதம்” என்றும் அழைக்­கப்­படும் இந்த இடம் இலங்­கையில் அமைந்­துள்­ளமை நாம­றிந்­ததே. ஆதி மனி­தனும் முதல் மனி­த­னு­மான ஆதமின் பாதத்தின் தடயம் அந்த மலையின் உச்­சியில் பதிந்­துள்­ள­தாக  இலக்­கி­யங்கள் பரப்­புரை செய்­கின்­றன.மட்­டு­மன்றி வாய்­வழி மூலம் சொல்­லப்­பட்டும், நம்­பப்­பட்டும் வரும் ஐதீ­க­மாக அது இன்று வரை இருந்து வரு­கின்­றது.

இறை ­வே­தங்­களை தமது அதி­கா­ரப்­பி­ர­தி­க­ளாக கொண்­டி­ருக்கும் செமிட்டிக் மதங்­க­ளான யூதம், கிறிஸ்­தவம், இஸ்லாம் ஆகி­ய­னவே “முதல் மனி­தன்”­என்ற கோட்­பாட்டை நம்­பு­கின்­றன.முதல் மனிதன் ஆதம்தான் என்­பதை மூன்று மதங்­களின் வேத நூல்­களும் கூறி நிற்­கின்­றன. முதல் மனி­தனை அல்­குர்ஆன் ஆதம் என  பெயர் குறித்து அழைக்­கின்­றது. இஸ்­லாத்தின் நம்­பிக்­கையின் படி ஆதம் முதல் மனிதர் என்­பதில் எந்த சந்­தே­கமும் இல்லை.

பாவா ஆதம் மலையை முஸ்­லிம்­களின் வர­லாற்று ஆதா­ர­மாக முன்­வைக்க முனையும் போது எழு­கின்ற மிக முக்­கி­ய­மான ஒரு பிரச்­சினை உள்­ளது. அதுதான் அல்­குர்அன், அல்­ஹதீஸ் ஆகிய மூலா­தார நூல்­களின் ஆதார வழியால் அது ஆதமின் கால் தடம்தான் என நிரூ­பிக்­கப்­ப­ட­வில்லை என்­பது. உண்­மையில் இஸ்லாத்தின் மூலப்­பி­ர­தி­களில் அதற்­கான ஆதாரம் இல்லை என்­பது உண்­மையே. ஆயினும் அது அப்­ப­டித்தான் நிறு­வப்­பட வேண்டும் என்ற அவ­சியம் இல்லை என்றே நான் கரு­து­கின்றேன்.

ஏனெனில், ஆதம் நபி முதல் மனிதர் என்­பது அல்­குர்­ஆனின் வழி வந்த நம்­பிக்கையாகும். ஆதம் நபி முதல் மனிதர் என்­பதை நிறு­வுவதே அது ஆதமின் காலடித் தடம் என்­பதை நிறுவ போது­மா­னது. இது வர­லாறு, தொல்­பொ­ரு­ளியல் ஆய்­வு­க­ளி­னூ­டாக நிறு­வப்­பட்­டாலே போது­மா­னது. இமாம் தபரி, ஆதம் நபி செரண்­டிப்­பிலே இறங்­கினார் என எழு­து­கிறார். அரபு உல­கிலும் அதற்கு வெளி­யிலும் ஆதம் நபி பற்­றிய எழுத்­தாக்­கங்­களில் ஆதம் மலையும் இலங்­கையும் பற்­றிய குறிப்­புக்கள் இருப்­ப­தா­னது ஆதம் நபியின் பாதச்­சு­வடு பற்­றிய நம்­பிக்கை ஒரு பொது­வான உள்­ளு­ணர்­வாக மாறி­விட்­டது எனலாம்.

அது வெறும் வர­லாற்று உணர்­வே­யன்றி புனி­தப்­ப­டுத்தும் நிலை­யல்ல. பாவா ஆதம் மலை புனித இடம் அல்­லது இஸ்­லாமின் மூன்று புனி­தத்­த­லங்­களை போன்ற இடம் என கரு­து­வதும் இல்லை என்ற நிலையில் அதனை எமது வர­லாற்றை நிறு­வு­வ­தற்­கான ஆதார வழி­யாகக் கொள்­வதில் பிழை­யில்லை.

இலங்­கையில் உள்ள தேசிய சமூ­கங்­களில் அர­சியல் சமூ­க­மாக விளங்கும் இலங்கை சோனக முஸ்­லிம்­களே முதல் மனிதர் கோட்­பாட்டு நம்­பிக்கை கொண்­டோ­ராக விளங்­கு­கின்­றனர்.  ஆகையால் ஏனை­யோரை விட அவ்­வி­டயத்­திற்­கான தர்க்க ரீதி­யான உரித்­து­டையோர் நாம்தான் என குரல் கொடுப்­பதில் எந்த தவ­று­மில்லை.

ஆதமின் பாதம் குறித்த நம்­பிக்­கை­யா­னது முஹம்­மதுர் ரஸூ­லுல்­லாஹ்வின் வரு­கைக்கு முன்­னி­ருந்தே தொடர்ந்து வரும் புரா­தன நம்­பிக்­கை­யாகும். அந்த நம்­பிக்­கையின் அடி­யேதான் ஆதமின் பாதச்­சு­வடு இலங்­கையில் இருப்­ப­தாக சொல்­லப்­ப­டு­கி­றது. இலங்­கையை தவிர வேறெங்கும் ஆதமின் பாதச்­சு­வடு இருப்­ப­தாக பல­மான வாதங்கள், நம்­பிக்­கைகள் இல்லை என்­பதால் இலங்­கையில் இருப்­பது ஆதமின் பாதச்­சு­வடு என  கூறலாம்.

பொது­வாக ஒரு வர­லாற்று நிகழ்வை அல்­லது ஆதா­ரத்தை அதன் அறி­வியல் தர்க்­கங்­களின் அடிப்­ப­டையில் புரிந்துகொள்­வதே போது­மா­னது. சிலர் ஆதமின் மற்­றைய பாதம் எங்­கி­ருக்­கின்­றது என வினா தொடுப்பர். ஒரு வர­லாற்று நிகழ்வு அது எதன் மீது கட்­ட­மைக்­கப்­ப­டு­கின்­றதோ அதனை நிறு­வு­வதை தவிர அதி­லி­ருந்து பிரியும் துணைக் கார­ணி­களை அல்­லது சந்­தே­கங்­களை நிறு­வு­வது அவ­சி­ய­மில்லை. ஏனெனில் அது ஒரு வர­லாறு என்­பதே அதற்­கு­ரிய கார­ண­மாகும்.

வர­லாற்றை நிகழ்­கால நிலை­யுடன் ஒப்­பிட முடி­யாது. நிகழ்­கா­லத்தில் ஒரு­வரின் ஒரு காலடித் தடம் இதுதான் எனக் கூற மற்­றைய காலடி எங்கே என்று வினா தொடுக்­கலாம். அதற்­கான ஆத­ராமும் முன்­வைக்­கப்­பட வேண்டும். ஏனெனில் அது சொல்­லப்­ப­டு­ப­வ­ரி­னதும் கேட்­கப்­ப­டு­ப­வ­ரி­னதும் நிகழ்­கால நிலை. வர­லாற்று நிகழ்­வொன்­றுக்கு அப்­ப­டி­யான வாதங்கள் அவ­சி­ய­மில்லை.

பாவா ஆதம் மலையின் இன்­றைய நிலை
 
இத்­த­கைய கருத்துப் பின்­பு­லத்­தி­லேயே நாம் அண்மையில் ஆதம் நபியின் பாதச்­சு­வடை பார்ப்­ப­தற்­காக மலை ஏறினோம். “உங்கள் வர­லாற்றை நிறு­வுவ­தற்கு வேறு இடத்தை பார்த்­துக்­கொள்­ளுங்கள்” என சொன்­னது போல் இருந்­தது அங்­குள்ள நிலை. அங்கே முழு­மை­யாக பௌத்த மேலா­திக்கம் நிரம்­பி­யுள்­ளது. புத்­தரின் பாதம் என்­பது மட்­டுமே மீள மீள வலி­யு­றுத்­தப்­ப­டு­கின்­றது.

இந்­துக்­களின் நம்­பிக்கையின் படி சிவனின் பாத­மென்ற உள்­ளு­ணர்வோ முஸ்­லிம்­க­ளுக்கு ஆதமின் பாதம் என்ற உள்­ளு­ணர்வோ வர வாய்ப்பே அங்கு இருக்­க­வில்லை. இலங்கை சோனக பண்­பாட்டு அடை­யா­ளத்தின் வாடையை கூட அங்கு நுக­ர­மு­டி­ய­வில்லை. இலங்கை புத்­தரின் தேசம் என்­பதை நிறு­விக்­கொள்­வ­தற்­கான ஓர் இட­மா­கவே அது இப்­போது காட்சி தரு­கி­றது.

பாவா ஆதம் மலைக்கு ஏறும் வரை பௌத்தம் ஒரு மதம் என்றே நான் கருதி­யி­ருந்தேன். ஆனால் அது பொய்த்து போனது. இலங்­கையில் பௌத்தம் என்­பது பௌத்த மேலா­திக்க வாத அர­சி­யலின் ஓர் சக்தி வாய்ந்த கரு­வி­யாக உள்­ளது புரிந்து போனது.
 Adam's paek எங்­குள்­ளது என எங்கள் மாண­வர்­களில் ஒருவர் கேட்­ட­போது “இங்கு அப்­படி ஒன்றும் இல்லை.
புத்­தரின் பாதம் மட்­டுமே உள்­ளது. இப்­படி கேட்டு குழப்­பு­வ­துதான் உங்கள் வேலை” என அந்த பாது­காப்பு உத்­தி­யோ­கத்தர் சொன்­னமை இன்னும் அதிர்ச்சி அடையச் செய்­தது. மலைக்கு ஏறும் வழியில் ஓரி­டத்தில் ஆங்­கி­லத்தில் “ Not Adam's Peak"என எழு­தப்­பட்­டி­ருந்­த­மை­யா­னது எந்­த­ளவு பௌத்த மேலா­திக்க வாதம் அங்கு நிலை­கொண்­டுள்­ளது என்­பதை அறிய போது­மா­னது.

 உல­க­ளவில் Adam's Peak என்ற பெயரில் பிர­ப­ல­மான சொற்­றொ­டரை மறு­த­லித்து அதன் மீது புத்­தரின் வர­லாற்றை நிறு­வு­வ­தற்கு பிர­யத்­த­னப்­பட்­டி­ருப்­பது மிக மோச­மான செய­லாகும்.இது தொடர்­பாக நான் எனது முக நூல் பக்­கத்தில் “இனி பாவா ஆதம் மலைக்கு சிங்­க­ளவர் பாசையில் சிறி­பா­த­மலை என்று சொல்­வதே பொருத்தம்” என எழு­தி­யி­ருந்தேன். அதற்கு எதிர்­வி­னை­யாக தோழர் ஒருவர் எழு­தி­யி­ருந்­ததை இங்கு குறிப்­பிட்டு காட்­டு­வது பொருத்தம் என கரு­து­கிறேன்.

“இந்தப் பதிவு நம்­பிக்­கை­யீ­னத்தின் பிர­தி­யாக தெரிந்­தாலும் அது­வல்ல நிஜம். ஒரு பூர்­வீகத்தின் எச்சம் எப்­ப­டியும் வேறு கால­னித்­து­வங்­களின் கீழ் அகப்­ப­டலாம். ஆனால் தொன்று தொட்ட மர­பார்ந்த கதை­யாடல் முக்­கி­ய­மா­னது. புத்தர் இலங்­கைக்கு வரவே இல்லை என மஹா­வம்சம் சொல்லும் போது, சிங்­கத்­திற்கும் மனி­த­னுக்கும் பிறந்­ததே சிங்­க­ளவர் என கதை­யாடும் நிலையில் ஆதமின் பாதம் புத்­த­ரி­னது என இட்­டுக்­கட்­டு­வது பெரிய விட­ய­மொன்­றல்­லவே. நன்­மைக்­கா­க­வன்றி புனி­த­மென்ற நிலைப்­பா­டன்றி ­பாவா ஆதம் மலை சோன­கரின் பரம்­ப­லுடன் இணைந்­தது” என எழு­தி­யி­ருந்தார்.

நமது கடமை என்ன?

உண்­மையில் பாவா ஆதம் மலை குறித்த எமது வர­லாற்று உரி­மையை நாம் நாம் விட்­டுக்­கொ­டுக்க முடி­யாது. அதுபற்றி உணர்­வுடன் நாம் இருக்க கடமைப்பட்­டி­ருக்­கின்றோம். உலக முஸ்­லிம்­க­ளி­னது மட்­டு­மன்றி இலங்கை சோனர்­களின் வர­லாற்றை நிறு­வு­வ­தற்­கான பல­மான வர­லாற்று ஆதாரம் இதுதான் என்­பதை நாம் மறந்துவிட முடி­யாது.

ஆயினும் வர­லாற்றின் மீதான எமது உணர்வு மீள புதுப்­பிக்­கப்­பட வேண்டும். குறிப்­பாக எமது இளைய சமூ­கத்­தினர் பாவா ஆதம் மலைக்கு ஒரு தட­வை­யா­வது ஏறி இறங்க வேண்டும். குறித்த இடத்­துக்­கான எமது அதி­கப்­ப­டி­யான பிர­சன்னம் பௌத்த மேலா­திக்க வாதத்தின் கருத்தை சற்றுக் குறைக்குமெனக் கரு­து­கிறேன். எமது கவ­ன­யீ­னமும் வரட்டு குதர்க்­க­வா­தமும் அது இந்த அளவு மாற்றம் காண கார­ண­மா­யி­ருந்­துள்­ளது என்­பதை நாம் மறுக்க முடி­யாது.

மேற்கு நாடு­களில் இருந்து வரும் கிறிஸ்­தவ ஆங்­கி­லே­யர்கள் அந்த மலைக்கு மிகுந்த ஆர்­வத்­தோடு ஏறு­வதை நாம் காணலாம். கிறிஸ்­த­வர்கள், முதல் மனிதக் கோட்­பாட்டை நம்­பு­வ­தனால் ஆதா­மி­லி­ருந்து வரும் அவர்­க­ளது வர­லாற்றுத் தொடரை மலை ஏறு­வ­தி­னூ­டாக நிரூ­பித்து வரு­கின்­றனர். அங்கு செல்­வதால் நன்மை கிடைக்­குமா போன்ற வாதங்­களால் எமது வர­லாற்றை நாமே மழுங்­க­டிக்க முனையக் கூடாது. புனி­தப்­ப­டுத்தும் நிலைக்­கா­கவன்றி வர­லாற்­று­ணர்­வுக்­காக அதனை தரி­சிப்­பது இலங்கை சோனகர் ஒவ்­வொ­ரு­வ­ரி­னதும் வர­லாற்றுக் கட­மை­யாகும்.

பாவா ஆதம் மலை குறித்த கதை­யா­டல்கள் இன்னும் பல மட்­டங்­களில் பர­வ­லாக்­கப்­பட வேண்டும். சமூகம் அது பற்­றிய பிரக்­ஞை­யற்று இருப்­ப­தற்கு அதுவும் ஒரு கார­ண­மாகும். புதிய தலை­மு­றை­யி­டையே  சிறி­பாத, சிவ­னொளிபாத என்ற சொல்­லா­டல்கள் பிர­ப­ல­மா­னதை போல  எமது பாரம்­ப­ரிய சொல்­லான “பாவா­த­மலை” என்ற சொல்­லாடல் அவ்­வ­ளவு அறி­மு­க­மில்லை என்­பதை பல­ரோடு உரை­யா­டி­யதில் புரிந்துகொள்ள முடிந்­தது.

பாரம்­ப­ரிய சொல் மீதான ஈடு­பாடே இப்­ப­டி­யென்றால் அதன் மீதான அறி­வியல் நோக்கு எந்­த­ள­வுக்கு பல­வீ­ன­மான நிலையில் இருக்குமென்பதை புரிந்துகொள்ள முடியும். ஆகவே பொதுவாக சமூகத்திலும் குறிப்பாக இளைய தலைமுறையிடம் பாவா ஆதம் மலை குறித்த கதையாடல் பரவலாக்கப்பட வேண்டும்.

“ஆதிக்க மொழி, ஆதிக்க வரலாற்று எழுதுகை, ஆதிக்க பண்பாட்டு வழித்தட உருவாக்கம் மற்றும் அனைத்தும் பேரினத்தின் அச்சத்தின் மீதான எழுதுகையாக இருக்கும் போது நமது அடையாளம் புதைந்து தானே இருக்கும்.நமது வேர்களின் ஆழத்தினை மேலால் படர்கின்ற புல்லினம் மறைக்கும் அதே வேளை, நாமும் ஆழத்தினை அறிய முயலவில்லை என்ற குற்றம் நம்மீதும் உள்ளது” என்ற தோழர் பர்சானின் வரிகளில் பொதிந்துள்ள உண்மைகளை நாம் மறுக்கவும் முடியாது.

உண்மையில் சொல்லப்போனால் பாவா ஆதம் மலையை பார்வையிட்டதிலிருந்து ஆதம் மலை மீதான எனது வரலாற்று உணர்வு சற்று துடிப்பிழந்திருந்தது. ஆயினும் இப்போது அது பல நூறு கேள்விகளோடும் எதிர்பார்ப்புகளோடும் உணர்வு பெற்று உயிர்பெற்றுள்ளது.

தெல்தோட்டை, தாரிக் ஸம்ஊன்
விரி­வு­ரை­யாளர் இர்­பா­னிய்யா அரபு,
இஸ்­லா­மிய கல்­லூரி, கெகு­ண­கொல்ல